நிவாரணப் பொதிகள் பகிர்தளிக்க சென்ற கிராம உத்தியோகத்தர் ( எம்.எம்.சதாத்) மீது தாக்குதல்.



 (எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை

பகுதியில் கிராம உத்தியோகத்தராக கடமை புரியும் நபர், நேற்று (11) மாலை தாக்குதலுக்குள்ளாகி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் பகிர்தளிக்கப்பட்ட போது, வெள்ளத்தால் பாதிப்படையாத பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழுவினர், தங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவில்லை என்று கூறி, தன்னைத் தாக்கியதாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.சாதாத், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


தனது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் வைத்தே மாலை 6.30 மணியளவில் குறித்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாக கிராம உத்தியோகத்தர் மேலும் பொலிஸில் முறையிட்டுள்ளார்.


இந்தத் தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்ட குழுவினரைக் கைது செய்து, விசாரணைகளை மேற்கொள்ள வாழைச்சேனை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நிவாரணப் பொதிகள் பகிர்தளிக்க சென்ற கிராம உத்தியோகத்தர் ( எம்.எம்.சதாத்) மீது தாக்குதல். நிவாரணப் பொதிகள் பகிர்தளிக்க சென்ற கிராம உத்தியோகத்தர் ( எம்.எம்.சதாத்) மீது தாக்குதல். Reviewed by Madawala News on January 12, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.