2024 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவ மாணவிகள் அனுமதி.அக்குறனை யகீன் மொடல் ஸ்கூல் மற்றும் அதன் பெண்கள் பிரிவான நிஸ்வான் மொடல் ஸ்கூல் ஆகிய பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான மாணவ மாணவியர் தற்போது அனுமதிக்கப் படுகின்றனர்.


யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்தப் பாடசாலைகள் இலங்கை அரசாங்கத்தின் பாடத்திட்டத்தை ஆங்கில மொழி மூலமாகப் போதிக்கும் அதே வேளை புனித அல்குர்ஆன் கல்வி, மற்றும் நடைமுறை வாழ்க்கைப் பயிற்சி, முயற்சியான்மைக் கல்வி, மேடைப் பேச்சாற்றல் பயிற்சி முதலியவற்றைப் பாடசாலைக் காலத்திலேயே மாணாக்கருக்கு வழங்குகின்றன.


சிறு வயதிலேயே குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்கள் இந்தப் பாடசாலைகள் மூலமாக உருவாக்கப்படுகின்றனர். இப்பாடசாலைகளுடன் இணைந்து இயங்கும் குர்ஆன் பிரிவு மூலமாக அனைத்து மாணவ மாணவியரையும் சரளமாக குர்ஆன் ஓத வைக்கக் கூடிய திட்டம் அமுல் நடத்தப்படுகிறது.


நவீன காலத்தின் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு தேவையான மென் திறன்கள் விருத்தி, தலைமைத்துவப் பயிற்சிகள், ஆளுமை விருத்தி சம்பந்தப்பட்ட செயற்பாடுகள், மேடைப்பேச்சாற்றல் விருத்தி சம்பந்தமான செயல்முறைகள், மாணாக்கரின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் செயற்பாடுகள் போன்ற ஏராளமான விடயங்கள் இப்பாடசாலைகளின் நாளாந்த நடைமுறையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


சிறு வயதிலேயே சரளமான ஆங்கிலம், தெளிவான குர்ஆன் ஓதுதல், சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற நடைமுறைப் பயிற்சி, 40 ஹதீஸ்களின் மனனம், நவீன கல்விக் கோட்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சம்பந்தப்பட்ட பரிச்சயம் என்பன மாணவ மாணவியருக்கு இந்த பாடசாலைகளிலே பெற்றுக் கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றன.

கல்விசார் தொழில்நுட்பம் சம்பந்தமான முதலாவது ஆய்வுப் பகுதி இப்பாடசாலைகளில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 1400 பாடங்கள் விசேடமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இவ்வாறான ஏற்பாடுகளைக் கொண்ட ஒரே நிறுவனம் யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் ஆகும்.

இவ்வாறான முன்னேற்பாடுகள் காரணமாக கடந்த கொரோனா தொற்று காலத்தில் கூட உடனடியாக இப்பாடசாலைகளின் ஒன்லைன் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பாடசாலைகளின் மாணவ மாணவியர் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமான மாணவ மாணவியர் இதன் மூலமாகப் பயனடைந்தனர்.

கல்வித் துறையில் நவீன கோட்பாடுகளுக்கும் புத்தாக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடசாலைகளில் மேலும் பல முன்னேற்றங்கள் விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக யகீன் குழுமத்தின் தலைவர் பஹ்மி பாரூக் எமது இணையத்தளத்திடம் தெரிவித்தார். புதிய கல்வித் திட்டத்தின் அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஏராளமான முன்னெடுப்புகள் உரிய நேரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

யகீன் மொடல் ஸ்கூலின் 16 வருடப் பூர்த்தி மற்றும் நிஸ்வான் மொடல் ஸ்கூலின் 10 வருடப் பூர்த்தியை முன்னிட்டு 2024ஆம் ஆண்டுக்கான அனுமதியில் திறமையான தரம் ஆறு முதல் 11 வரையான மாணவ மாணவியருக்கு விசேட விலைக் கழிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் LKG, UKG, தரம் 1 முதல் 11 வரை ஆன அனைத்து வகுப்புகளுக்கும் மாணவ மாணவியர் தற்போது அனுமதிக்கப்படுகின்றனர்.

விபரங்களுக்கு 0766 450 600 என்ற இலக்கம் மூலமாகக் காரியாலயத்தைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது இலக்கம் 33/1, கிங்ஸ் கோட், அம்பதன்னை எனும் முகவரியில் அமைந்துள்ள தலைமைக்காரியாலயத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தகவல்: ஹைஸம் சீராஸ் 
2024 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவ மாணவிகள் அனுமதி. 2024 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவ மாணவிகள் அனுமதி. Reviewed by Madawala News on December 23, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.