என்னை யாராவது விமர்சித்தால் அவர்களுக்கு இது தான் நடக்கும் என்ற அச்சுறுத்தலை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

 இன்று (12) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கள்.


இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒர் வருடம் பூர்த்தியானதும் பொருட்களின் விலை அதிகரிப்பு, கொரோனா அதிகரிப்பு மற்றும ஜனாதிபதியின் சில கருத்துக்கள் என்று பல விடயங்கள் குறித்து பேசலாம், எடுத்து நோக்கலாம்.


ஹரின் பெர்னான்டோ அவர்களின் பாராளுமன்ற உரைக்கு ஜனாதிபதி அம்பாரையில் தானாகவே இதற்கு பதிளித்தார். யாரும் அவரிடம் இது குறித்து கேள்வி கேட்கவில்லை. அவராகவே பதிளித்து ஒர் விடயத்தை நாட்டுக்குக் கூற வருகிறார்.பிராபாகரனின் மரனத்தோடு ஹரீனின் கருத்துக்களை ஒப்பிட்டது தான் இங்குள்ள பிரச்சிணை. இதில் ஏதோ உள் நோக்கம் இருக்கிறது. எனக்கு யாராவது விமர்சித்தால் அவர்களுக்கு இது தான் நடக்கும் என்ற அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.


அவருடை முழு பெயரின் ஒரு பகுதியை கூறியதற்கு இவ்வாறு கோபப்படுவது பிழையான விடயமாகும்.கருத்துச் சுதந்திரத்தை  வழங்க மறுப்பதற்கான ஒர் சமிஞ்சை தான் இது. ஜனநாயக ரீதியாக பரிய அச்சுறுத்தலாகும்.


அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்கள் இன்று புரிந்து கொண்டுள்ளனர் அவருக்கு இரண்டு முகங்கள் இருப்பதாக,இதை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு மக்கள் நன்றி செலுத்த வேண்டும். இவ்வளவு நாளும் அவருக்கு என ஒரு முகம் இருப்பதாகவே தான் மக்கள் புரிந்துள்ளனர்.ஆனால் அவராகவே எனக்கு இரண்டு முகங்கள் உள்ளதாக தெரிவித்துள ளார். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


இந்த கருத்துக்கள் மூலம் சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்தியை ஏற்படுத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் கட்டியொழுப்பிய நல்லபிப்பிராயத்தை இவர்கள் மீண்டும் மோசமாக்கி வருகிறார். அன்று அவர்களுக்கு இருந்த சர்வதேச அழுத்தங்களை நல்லாட்சி அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டு அவர்களைப் பாதுகாத்தது என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


அத்தியவசிய பொருட்களுக்கு விலை நிர்னயித்து10 கும் மேற்ப்பட்ட பல வர்தமானிகள் வெளியிட்டாலும் வியாபாரிகள் அதற்கேற்ப தமது நுகர்வேர்களுக்கு கொடுப்பதில்லை.அரசிக்கு மாத்திரம் 5 வர்தமானிகள் வெளியிட்டுள்ளார் இருந்தாலும் மக்களுக்கு உரிய விலையில் கொள்வணவு செய்ய முடியாத நிலை குறித்து ஜனாதிபதிக்கு கோபம் வந்ததா?சீனி விலை கூடியுள்ளது அதற்காக வர்த்தமானி வெளியிட்டும் மக்களுக்கு உரிய விலையில் கொள்வணவு செய்ய முடியாத நிலை குறித்து ஜனாதிபதிக்கு கோபம் வந்ததா? பருப்பு விலை கூடியுள்ளது.

அதற்காக வர்த்தமானி வெளியிட்டும் மக்களுக்கு உரிய விலையில் கொள்வணவு செய்ய முடியாத நிலை குறித்து ஜனாதிபதிக்கு கோபம் வந்ததா?தேங்காய்கு வர்த்தமானி வெளியிட்ட ஒரே அரசாங்கம் மக்களுக்கு உரிய விலையில் கொள்வணவு செய்ய முடியாத நிலை குறித்து ஜனாதிபதிக்கு கோபம் வந்ததா? 80 ரூபாவுக்கு சீனி சந்தையில் இல்லை.98 ரூபாவுக்கு அரசி சந்தையில் இல்லை.இவற்றில் கொள்ளையடித்த கறுப்புப் பணம் சம்பாதித்தவர்கள், இவற்றில் ஊழல் செய்தவர்களுக்கு ஜனாதிபதி இவ்வாறு கூறியிருக்கலாம்.ஜனாதிபதி இவர்களுக்கு கோபப்பட மாட்டார்.ஏனனில் இவை மக்களுக்குரிய விடயமல்லவா,இவற்றுக்கு ஜனாதிபதிக்கு கோபம் வராது என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

என்னை யாராவது விமர்சித்தால் அவர்களுக்கு இது தான் நடக்கும் என்ற அச்சுறுத்தலை ஜனாதிபதி விடுத்துள்ளார். என்னை யாராவது விமர்சித்தால் அவர்களுக்கு இது தான் நடக்கும் என்ற அச்சுறுத்தலை ஜனாதிபதி  விடுத்துள்ளார். Reviewed by Madawala News on January 12, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.