கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர், உடல் நீதியான உறவில் ஈடுபட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து அவர், மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்ட சம்பவம் பதிவு. உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த 13 வயது சிறுமி மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.


குருணாகல், ஹெட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியே இவ்வாறு கர்ப்பம் தரித்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்ட போதும் இது தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்காததால் சிறுமி மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயிற்று வலியினால் அவதிப்பட்டுள்ள நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பின்னர் வைத்திய பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், மேலதிக பரிசோதனைகளில் பாதிக்கப்பட்ட சிறுமி உடலுறவு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர், உடல் நீதியான உறவில் ஈடுபட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து அவர், மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்ட சம்பவம் பதிவு. கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர், உடல் நீதியான உறவில் ஈடுபட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து அவர்,  மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்ட சம்பவம் பதிவு. Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.