கட்டாரில் இருந்து வந்த தம் மகன் மாவனெல்லை ரஷாட் மாயம் - தேடி அலையும் பெற்றோர்கட்டாரில் இருந்து வந்த மகனை காணவில்லை!
தேடி அலையும் பெற்றோர்.

கட்டாரில் சுமார் 2 வருட காலம் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய தமது பிள்ளையை காணவில்லையென பெற்றோர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்து தேடிவருகின்றனர்.


மாவனெல்லை சபியா வத்தையை சேர்ந்த A.S.முஹமட் ரஷாட் எனும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.


விமான நிலைய CCTV காணொளிகளின் படி கடந்த மாதம் 28ம் திகதி இலங்கைக்கு வந்த மேற்படி ரஷாட் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து மாலை 6:35 மணியளவில் வெளியேறி உள்ளார்.

அதன் பின்னர் எந்த வாகனத்தில் யாருடன் எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் இதுவரைக்கும் இல்லை.

ரஷாட் பயன்படுத்திய தொலைபேசி இலக்கமும் இணைப்பில் இல்லை.

இதனால் பெற்றோர்கள் பெரும் மன உழைச்சலுக்கு ஆட்பட்டுள்ளனர்.

எனவே படத்தில் காணப்படும் இவர் பற்றிய தகவல்கள் ஏதும் உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக பெற்றோர்களை தொடர்பு கொண்டு அறியத்தாருங்கள்.

“எங்கள் பிள்ளை எங்கேனும் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியாவது கிடைத்தால் எங்களுக்கு அதைவிடவும் நிம்மதியான செய்தி எதுவுமில்லை” என பெற்றோர் அழுகின்றனர்.

எனவே #ரஷாட் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு வேண்டுகிறோம்.
👇👇
தாய் : 077 114 5645
தந்தை : 077 186 5828


#Almashoora Madawala News #AlmashooraBreakingNews #KEEP_THE_FAITH
கட்டாரில் இருந்து வந்த தம் மகன் மாவனெல்லை ரஷாட் மாயம் - தேடி அலையும் பெற்றோர் கட்டாரில் இருந்து வந்த தம் மகன் மாவனெல்லை ரஷாட் மாயம் - தேடி அலையும் பெற்றோர் Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.