உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவாகாரம்.. பிணை ரத்தாகி, ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்.


உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை 
தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு உயர்நீதிமன்றினால் இன்று (09) ரத்துச் செய்யப்பட்டுள்ளது.


சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட மனு தொடர்பான தீர்ப்பினை இன்று (09) வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராய்ச்சி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.


அதன்படி, குறித்த இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


குறித்த சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கும் போது கொழும்பு பிரதான நீதவான் தனக்கு அற்ற அதிகாரம் ஒன்றினை உருவாக்கி சட்டத்தை மீறி பிணை உத்தரவை வழங்கியுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராய்ச்சி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவாகாரம்.. பிணை ரத்தாகி, ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவாகாரம்.. பிணை ரத்தாகி, ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்.  Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5