ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் பிரண்டியாவத்தை முஸ்லிம்களை சந்தித்தார் !ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் நேற்று வெல்லம்பிட்டிய பிரண்டியாவத்த  அத்னான் ஜும்மா பள்ளிவாயலுக்கு நேற்று விஜயம் செய்தார்.


கலாநிதி ஹிஸ்புல்லாஹ் பிரண்டியாவத்தை முஸ்லிம்களை நேற்று இரவு சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தான்  போட்டியிடுவது தொடர்பில் விளக்கமளித்தார்.


இந்த சந்திப்பில் அப்பிரதேசத்தை சேர்ந்த வஸீம் ஹாஜியர்,ஷாபித், நபீஸ் ,அஸாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


குறித்த பள்ளிவாயலை நிறுவுவதற்கு கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களின்  பங்களிப்பு தொடர்பில் பிரண்டியாவத்தை முஸ்லிம்கள் அவருக்கு நன்றி தெரிவித்ததுடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர்.ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் பிரண்டியாவத்தை முஸ்லிம்களை சந்தித்தார் ! ஜனாதிபதி  வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் பிரண்டியாவத்தை முஸ்லிம்களை சந்தித்தார் ! Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5