(Video / Photos) மினுவாங்கொடையில் (கலவரத்தில்) எரிக்கப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள்.


கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து,
மே மாதம் 13ஆம் திகதி மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தினால் சேதமாக்கப்பட்ட கடைகளுக்கு மாற்றீடாக நிர்மாணிக்கப்பட்ட 28 கடைகள் நேற்று மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அவர்களினால், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்குக் கையளிக்கப்பட்டது.

மினுவாங்கொடை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கடைத் தொகுதியின் நிர்மாணப்பணிக்கான நிதி உதவியினை, உலக மேமன் சங்கமும், வெள்ளவத்தை, தெஹிவளை மற்றும் கிருலப்பனை பள்ளிவாசல்கள் ஒன்றியமும் வழங்கியிருந்தன.

நகர சபையின் திட்டமிடலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட  இக்கடைத் தொகுதிக்கு 20 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, மினுவாங்கொடை விகாராதிபதி உட்பட உலமாக்கள், பொதுமக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.















(Video / Photos) மினுவாங்கொடையில் (கலவரத்தில்) எரிக்கப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள். (Video / Photos) மினுவாங்கொடையில் (கலவரத்தில்) எரிக்கப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள். Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.