குண்டு தாக்குதளை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை கட்டுப்படுத்த அதிகாரம் கிடையாது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக பாராளுமன்ற
தெரிவுக்குழுவை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அதிகாரம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பாராளுமன்றத்தினரும் பொது மக்களினதும் இறைமையை பாதுகாப்பதற்கும் தாம் செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தெரிவுக்குழு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்ற கோரிக்கையுடன் சிவில் அமைப்புகள் சில இன்று காலை பிரதமரை சந்தித்த வேளையிலேயே இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
குண்டு தாக்குதளை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை கட்டுப்படுத்த அதிகாரம் கிடையாது. குண்டு தாக்குதளை விசாரிக்கும்  பாராளுமன்ற தெரிவுக்குழுவை கட்டுப்படுத்த அதிகாரம் கிடையாது. Reviewed by Madawala News on June 11, 2019 Rating: 5