இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்க செயலாளர்அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo), இந்த மாதத்தின் இறுதிப்பகுதியில்
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அவர் இலங்கை விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இந்த நாட்களில் இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சுதந்திரமான திறந்த இந்திய பசுபிக் வலயத்தை உருவாக்கும் நோக்குடன் அவர் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்க செயலாளர்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் Reviewed by Madawala News on June 11, 2019 Rating: 5