(படங்கள்) சகஜீவனை ஏற்படுத்து முகமாக மினுவான்கொடை ஜூம்ஆப் பள்ளிவாசலில் சர்வமத சந்திப்பு.


(அஸ்ரப் ஏ சமத்)
மினுவான்கொடை நகர ஜூம்ஆப் பள்ளிவாசலில் சர்வமத சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
மீண்டும் சகஜீவனை ஏற்படுத்து முகமாக ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தினாா்கள். இவ் ஊடக சந்திப்பினை சிரேஸ்ட ஊடகவியலாளா் எம். ஏ நிலாம், மற்றும் வர்த்தகா் கபீர் ஏற்படுத்தினாா்கள்.

இங்கு கிரிஸ்த்துவ மத அருட்தந்தை நதிர பெர்ணான்டோ, இந்து மத சிவஸ்ரீ  குமாா் சா்மா குருக்கள், மினுவான்கொடை தர்மராம இந்துல உடக்கந்த ஜானந்த தேரா் மற்றும் மினுவான்கொடை ஜம்ஆப் பள்ளிவாசல் பிரதம இமாம்  எம்.எஸ்.எம் நஜீம் ஆகியோறும் உரையாற்றினாா்கள்.  அத்துடன் பள்ளிவாசலில்  முன்றலில் சகலரும் இணைந்து வெசாக் தினத்தினை  முன்னிட்டு பௌத்த கொடிகளையும் ஏற்றி வைத்தனா்.


இங்கு உரையாற்றிய ஜானந்த தேரா் உரையாற்றுகையில்
மினுவான்கொடை நகரில் பராம்பரியம் தொட்டு நாம் மிகவும் அன்னியோன்னியமாகவும் ஜென்சன்னியமாக வாழ்ந்து வந்தோம். கடந்த வாரம் நடைபெற்ற  அசம்பவாதிங்களுக்கு பின்னால் சில இனக்குரோம் கொண்ட அரசியல் வாதிகளின் இருக்கின்றாா்கள். அவா்களின் என்னங்களுக்கு குரோதங்களுக்கு நாம் மீண்டும் பழிக்காடாகமால் ஜக்கியமாக நமது சாதாரண வாழ்வினை நாம் ஆரம்பிப்போம்.

பிரதம இமாம்  மௌலவி நஜீம் இங்கு உரையாற்றுகையில் - பாதிக்கப்பட்ட மக்களது சொத்துக்கள் மற்றும் கடைகள் மீள வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கமும் அரச அதிகாரிகளும் முன்வந்து அரச நஸ்ட ஈட்டினை வழங்குமாறு வேண்டிக் கொண்டாா். சேதமுற்ற கட்டிடங்கள் வியாபார நிலையங்களை ஆரம்பிப்பதற்கு உதவுமாறும் வேண்டிக் கொண்டாா்.
(படங்கள்) சகஜீவனை ஏற்படுத்து முகமாக மினுவான்கொடை ஜூம்ஆப் பள்ளிவாசலில் சர்வமத சந்திப்பு. (படங்கள்) சகஜீவனை ஏற்படுத்து முகமாக மினுவான்கொடை ஜூம்ஆப் பள்ளிவாசலில் சர்வமத  சந்திப்பு. Reviewed by Madawala News on May 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.