முகத்திரை தொடர்பான சட்ட ஏற்பாடு !


  எம் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய தார்மீக பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு .



கடந்த சில நாட்களாக நம் நாட்டில் நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக முஸ்லிம் சமூகத்தினர் பல சிக்கல்களை எதிர் நோக்கி வருவதை பரவலாக அறியக்கூடியதாக உள்ளது. இதற்கு என்னதான் தீர்வு என பலர் விவாதித்து கொண்டிருப்பதையும் கருத்து சொல்ல வருபவர்களை எம்மவர்களே நய்யாண்டி செய்தும் கேலி செய்தும் முக நூலில் தங்களது இஷ்டப்படி பத்வா வழங்கும் சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

தற்போது இலங்கையில் அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம் அதேவேளை நாட்டில் அவசரமாக சில சட்டங்களும் இயற்றப்பட்டு அது மிக தீவிரமாக சகோதர இணத்தவர்களால் அவர்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறெல்லாம் மக்களிடையே பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒரு விடயம்தான் இந்த முகத்திரைக்கான தடை.

தற்போது நம் நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் நோக்கினால் ஒருவர் தனது முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிவது குற்றம் எனவே இப்படி ஒரு நிலமை இருக்கும் போது நமது சகோதரிகள் சிலர் தாங்கள் வயது வந்த காலம் முதல் இன்று வரை முகத்தை மூடிக்கொண்டுதான் இருக்கிறோம் திடீர் என எவ்வாறு முகத்தை திறந்து பொது வெளியில் வருவோம் என கூறுகின்றனர். இவர்களின் கருத்து 100% நியாயமான ஒன்று ஆனாலும் நாம் என்ன செய்ய முடியும்? நாட்டின் பொதுப் பாதுகாப்புக்கு முகத்தை மூடுதல் தடை என்ற சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டு இருக்கும் நிலமையில் நாம் எதுவும் செய்ய முடியாதவர்களாக மாறி இருக்கிறோம். அதனை மீறி நாம் செயற்பட்டால் சந்தேகத்தின் பெயரில் எம்மை கைது செய்து எம் மீது ICCPR அல்லது PTA க்கு கீழ் வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரம் போலீசாருக்கு உண்டு. மேலும் இந்த நேரத்தில் எம்மை ஒரு சாதரண படைவீரன் கூட கைது செய்யலாம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அவ்வாறு ICCPR அல்லது PTA க்கு கீழே வழக்கு தாக்கல் செய்தால் பிணை வேண்டி நாம் மேல் நீதிமன்றுக்கே செல்ல வேண்டும் அது இலகுவான ஒரு விடயம் அல்ல..

எமது சமூகம் தற்போது செய்ய வேண்டியது என்னவெனில் இவ்வளவு காலமும் முகத்திரை அணிந்து பழக்கப்பட்டவர்கள் அதனை அகற்றுவதற்கு கடுமையாக உள வேதனைக்கு உள்ளாகும் நிலையில் இருப்பார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டுமே ஒழிய நாமே அவர்களை நய்யாண்டி செய்யும் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடாமல் அவர்களுக்கு மன உறுதியை வழங்க முன்னின்று செயற்பட வேண்டும். மேலும் எமது பகுதி உலமாக்கள் முகத்திரை அணிய வேண்டாம் என  அழகான முறையில் உபதேசம் சொல்ல வேண்டும்.

இவ்வாறு நாம் செய்ய தவறியமையால் கற்பிட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை 17.05.2019 அன்று முகத்திரை அணிந்து வெளியில் சென்ற ஒரு முஸ்லிம் பெண்மணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டு 07 நாட்கள் விளக்க மறியலுக்கு உள்ளாகி இருக்கிறார். இது யாருடைய பிழை என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே எமது முஸ்லிம் பெண்மணிகளுக்கு இந்த நேரத்தில் தைரியம் கூறி அவர்களை எமது நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வைக்க நாம் ஒவ்வொருவரும் செயற்படுவதன் மூலம் அவர்களை தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வைக்காமல் பாதுகாக்க முடியும்.

மு. இ. இயாஸ்தீன்
சட்டத்தரணி


முகத்திரை தொடர்பான சட்ட ஏற்பாடு ! முகத்திரை தொடர்பான சட்ட ஏற்பாடு ! Reviewed by Madawala News on May 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.