பள்ளி, மத்­ர­ஸாக்­களை ஒழுங்­கு­ப­டுத்த திட்டம்
· பிர­சங்­கங்­களில் சட்­டத்­துக்கு முர­ணான விட­யங்கள் 
உள்­வாங்­கப்­ப­டக்­கூ­டாது.


· ஜும்ஆவின் போது 5 பள்­ளி­வா­சல்கள் இருந்தால் ஒரு பள்­ளி­வா­ச­லி­லேயே ஒலி­பெ­ருக்கி பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். சப்தம் வரை­ய­றுக்­கப்­பட வேண்டும்.

· பள்­ளி­வாசல் நிர்­வா­க­ சபைத் தெரி­வின்­போது தஃவா அமைப்­புகள் அனைத்­தி­னதும் பிர­தி­நி­திகள் உள்­வாங்­கப்­ப­ட ­வேண்டும்.


நாட்­டி­லுள்ள பள்­ளி­வா­சல்கள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்­களை தேசிய வேலைத்­திட்டம் ஒன்றின் கீழ் ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலை­மையில் நேற்று அமைச்சில் இடம்­பெற்ற முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலின் போதே இவ்­வாறு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, தேசிய சூறா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் வக்பு சபை, வை.எம்.எம்.ஏ, கண்டி புத்­தி­ஜீ­விகள் ஒன்­றியம் என்­ப­ன­வற்றின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர்.

இதன்­போது ஜும்ஆ பிர­சங்­கங்­களில் அர­சாங்க சட்­டத்­துக்கு முர­ணான விட­யங்கள் உள்­வாங்­கப்­ப­டக்­கூ­டாது. 

ஒரு பகு­தியில் 5 ஜும்ஆ பள்­ளி­வா­சல்கள் இருந்தால் ஜும்ஆவின்போது ஒரு பள்­ளி­வா­ச­லிலே ஒலி­பெ­ருக்கி பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

அத்­தோடு அதன் சப்தம் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு உட்­பட்­ட­தாக அமை­ய­வேண்டும். 

பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபைத் தெரி­வின்­போது அப்­பி­ர­தே­சங்­களைச் சேர்ந்த தஃவா அமைப்­புகள் அனைத்­தி­னதும் பிர­தி­நி­திகள் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும் எனும் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

கலந்­து­ரை­யா­டலின் போது குத்பா பிர­சங்­கங்­களின் தலைப்பு, பிர­சங்க நேர எல்லை என்­பன தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் கவனம் செலுத்த வேண்­டு­மெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

மத்­ரஸா பதி­வு­களை ஒரு பொறி­மு­றையின் கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் மாத்­தி­ர­மின்றி வக்பு சட்­டத்தின் கீழ் பதி­வு­செய்­யப்­பட வேண்டும் எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இவ்­வா­றான பதி­வுகள் மூலம் மத்­ர­ஸாக்­களின் தரத்­தினை மேலும் உயர்த்த முடியும் என்­பதை கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்ட அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டனர்.

முஸ்­லிம்­களின் சம­கால பிரச்­சி­னைகள் மத்­ர­ஸாக்கள் ஊடாக தீர்க்­கப்­படும் வகையில் அவை மீள் கட்­ட­மைக்­கப்­ப­ட­வேண்டும். மத்­ர­ஸாக்கள் வகை 1, 2, 3 என தரப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கலந்­து­ரை­யா­டலின் போது கருத்து தெரி­விக்­கையில்; 

மத்­ர­ஸாக்­களில் மார்க்­கக்­கல்­வி­யுடன் பாட­சாலைக் கல்­வியும் வழங்­கப்­பட வேண்டும். அனைத்து மத்­ர­ஸாக்­க­ளிலும் பொது­வான பாடத்­திட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் பொதுவான பரீட்சையே நடத்தப்பட வேண்டும். இதன் மூலமே மத்ரஸாக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த முடியும்.

மத்ரஸா மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தற்போது எமக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றன என்றார்.
பள்ளி, மத்­ர­ஸாக்­களை ஒழுங்­கு­ப­டுத்த திட்டம் பள்ளி, மத்­ர­ஸாக்­களை ஒழுங்­கு­ப­டுத்த திட்டம்  Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5