புத்தளம் அறுவாக்காட்டு பிரதேசத்தை சாக்கடையாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வாபஸ்பெறவேண்டும்



ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்
திண்மக்கழிவுகளை கொட்டி புத்தளம் அறுவாக்காட்டு பிரதேசத்தை சாக்கடையாக்கும்
அரசாங்கத்தின் திட்டத்தை வாபஸ்பெறவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் காதர்  மஸ்தான் இன்று சபையில் தெரிவித்தார். 

அங்கு மேலும் தெரிவித்த அவர், 

வன்னி மக்கள்  யுத்தத்துக்கு முன்னர்  வாழ்ந்த சொந்த இடங்களில்  எவ்வாறு தமது விவசாயம், மந்தை மேய்ப்பு, சேனைப் பயிச்செய்கை மற்றும்  மீன்பிடித் தொழில்களைச் செய்துவந்தார்களோ அதே வகையில் எவ்வித தடைகளுமின்றி தமது வாழ்வாதார நடவடிக்கைளை முன்னெடுக்கத் தேவையான சூழல் மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும்.

அத்துடன் மீள்குடியேறிய மக்களின் வீட்டுத்திட்ட பிரச்சினை தொடர் கதையாகவே இருந்து கொண்டு இருக்கின்றது. இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு விஞ்ஞான ரீதியான நீதியான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். பிராந்திய ரீதியான மேன்முறையீட்டு குழுவோடு அமைச்சு மட்டத்திலான அல்லது தேசிய மட்டத்திலான மேன்முறையீட்டு ஆணைக்குழு ஒன்றை நிறுவி சுதந்திரமான நீதியான பக்கச்சார்பற்ற வினைத்திறன் மிக்க செயற்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டுமென பிரதமரிடம் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள் சார்பாக விஷேடமாக வன்னி மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டத்தின் மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
புத்தளம் அறுவாக்காட்டு பிரதேசத்தை சாக்கடையாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வாபஸ்பெறவேண்டும் புத்தளம் அறுவாக்காட்டு பிரதேசத்தை சாக்கடையாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வாபஸ்பெறவேண்டும் Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.