நன்றி மறந்த சந்திரிக்காவும், அவரது சகாக்களும்..!

1994ம் ஆண்டு அஸ்ரப் சந்திரிக்காவுக்கு ஆதரவளிக்காமல் காமினி 
திஸாநாயக்காவுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் சந்திரிக்கா என்ற நாமமே அழிந்துபோயிருக்கும். 

அந்த பாராளுமன்ற தேர்தலில் 105 உறுப்பினர்களை மாத்திரமே பெற்றிருந்த சந்திரிக்காவுக்கு மு.காங் உறுப்பினர்களின் 7பேரின் ஆதரவு தேவைப்பட்டிருந்தது. அப்படி அஸ்ரப் சந்திரிக்காவோடு இணைந்தால் தானும் இணைவேண் என்று மலையக எம்பியாக தெரிவு செய்யப்பட்ட சந்திரசேகரனும் கூறியிருந்தார். அதன் காரணமாக 8 உறுப்பினர்களும் சந்திரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்ததன் காரணமாகவே சந்திரிக்கா ஆட்சிக் கட்டிலில் ஏறினார்.

தலைவர் அஸ்ரப் எவ்வித நிபந்தனையும் செய்துகொள்ளாமல் சந்திரிக்கா ஆட்சியமைக்க சம்மத கடிதம் வழங்கியதன் பின்பே அப்போதைய ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க சந்திரிக்காவை ஆட்சியமைக்க அழைத்திருந்தார். அதன் பின்பே பல வருடங்கலாக பதவியை ருசிக்காத ஸ்ரீ.சு.கட்சியைச் சேர்ந்தவர்கள் பதவியை ருசித்தார்கள். இதற்கு காரணமானவர் அஸ்ரப்தான் என்பதை அன்று உணர்ந்து பாராட்டியவர்கள் காலம் போகப்போக அஸ்ரப்புக்கே ஆப்பு வைக்க துவங்கினார்கள்.

அதன் உச்சக்கட்டம்தான் பௌசி அவர்கள் அஸ்ரப் அவர்களுக்கு சவால் விட்ட விடயமாகும். சந்திரிக்காவின் அரசாங்கத்தில் உள்ளோர் பிற்காலத்தில் அஸ்ரப் அவர்களை மதியாமல், எங்கள் ஆட்சி இல்லையென்றால் மு.காங்கிரஸ் என்றோ காணாமல்போயிருக்கும் என்று பாராளுமன்றத்தில்  ரிச்சட் பத்திரன, பௌசி போன்றோர் ஏளனமாக பேசியபோது, சகல விடயங்களையும் அறிந்திருந்த சந்திரிக்கா அம்மையார் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்ற கோபத்தின் காரணமாகவே சந்திரிக்கா அரசாங்கத்தோடு இனி தொடர்ந்து பயணிக்க முடியாது என்றுகூறி 52பக்க கடிதத்தை சந்திரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

அந்தக் கடிதத்தில் பல உண்மைகளையும், பல மர்மான விடயங்களையும் சந்திரிக்காவுக்கு ஞாபகபடுத்தி எழுதிவிட்டு, இறுதியாக நான் இல்லாது விட்டால் நீங்களும் உங்கள் சகாக்களும் ஆட்சிக் கட்டிலில் ஏறியிருக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியதுடன் எதிர்வரும் தேர்தலில் உங்களின் ஆதரவு இல்லாமலே தனித்து நின்று ஜெய்த்துக் காட்டுகிறேன் பாருங்கள் என்றும் சவால் விட்டிருந்தார். இந்த கடிதம் கிடைத்ததன் பின்பும் பௌசியை கண்டிப்பதை தவிர்த்திருந்தார் சந்திரக்கா அம்மையார். இந்த விடயங்கள் தலைவர் அஸ்ரப்பின் கோபத்தை கடுமையாக அதிகரிக்க செய்திருந்தது. அதன் காரணமாக எதிர்வரும் தேர்தலில் சந்திரிக்காவின் ஆட்சியை கடுமையாக விமர்சிக்கவும் திட்டம் தீட்டியிருந்தார் தலைவர் அஸ்ரப். 

இந்த விடயங்கள் அனைத்தும் சந்திரிக்காவுக்கும், அவரது சகாக்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல, இதன் காரணமாக பெரும்பாண்மையான முஸ்லிம்கள் எங்கே எமது கட்சியை நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படதுவங்கியது. அஸ்ரப்பின் நிலைப்பாடானது பாராளுமன்ற தேர்தலின் பின்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் எம்மை பாதிக்கும் என்ற பயமும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. இப்படியான அச்சம் அவர்களுக்கு இருந்தாலும் தலைவர் அஸ்ரப்பை சமாதானம் செய்யும் நோக்கமோ அல்லது அஸ்ரப் அவர்களுக்கு எதிராக பேசியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ சந்திக்கா அம்மையார் முயற்சிக்கவில்லை என்பதே இங்கே கவணிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விடயமாகும்.

#இந்த #நிலைமையில்தான் #தலைவர் #அஸ்ரப் #அவர்கள் #ஹெலிவிபத்தில் #கொல்லப்படுகின்றார்..?

அவருடைய மரணத்துக்கு யார் காரணம் என்பதை அறிந்துகொள்ள யாரும் முயற்சிக்கவில்லை என்பதோடு, அவரது மரணத்துக்குபின்  எதிர்பார்க்காதவர்கள் எல்லாம் பதவிகளையும் சுகபோகங்களையும் பெற்றுக் கொண்டார்கள். அஸ்ரப் கொல்லப்படாமல் இருந்திருந்தால் நமக்கு இப்படியான சுகபோக வாழ்கை கிடைத்திருக்குமா? என்று நினைப்பவர்கள் அஸ்ரப்பின் மரணத்தை எப்படி கவலையோடு பார்ப்பார்கள் என்பதை சமூகம் இன்றுவரை உணர்ந்து கொள்ளவில்லை. மாறாக ஆதவன் பாட்டுக்கும், மு.காங். என்ற நாமத்துக்குமாகவே வாக்களிக்கின்றார்கள். ஆனால் இவர்கள் யார் என்று புரிந்துகொள்ள மறுக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.

ஆகவே பதவி, புகழ், பணம், பெண், பொன் இவைகள் அனைத்தும் கிடைக்க காரணமாக இருந்த ஒருவரின் மரணத்தை ஏன் தோண்டியெடுத்து விமர்சிக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில் தப்பில்லையென்றே தோன்றுகிறது..?

எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை.
நன்றி மறந்த சந்திரிக்காவும், அவரது சகாக்களும்..! நன்றி மறந்த சந்திரிக்காவும், அவரது சகாக்களும்..! Reviewed by Madawala News on March 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.