(VIDEO) மாற்றுத் திறனாளி முகம்மது அலியின் பயணம் அக்கரைப்பற்றை அடைந்தது... பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.


இன நல்லிணக்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் என்பனவற்றை வலியுறுத்தி
இலங்கையைச் சுற்றி சாதனைப் பயணம் ஒன்றை மாற்றுத் திறனாளி முகம்மது அலி மேற்கொண்டு வருகின்றார்

 வவுனியாவைச் சேர்ந்த முகம்மத் அலி சென்ற 1ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து தனது பயணத்தை வலுவிழந்தோருக்கான சக்கர நாற்காலி மூலம் ஆரம்பித்து இன்று(09) சனிக்கிழமை அக்கரைப்பற்றை சென்றடைந்தார்.

 சமூக சேவை திணைக்களத்தின் ஆதரவுடன் இடம்பெற்று வரும் இவரது பயணத்திற்கு சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் ஆதரவையும், உதவிகளையும் செய்து வருவதாக முகம்மட் அலி இதன் போது தெரிவித்தார்.

 இப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் மாற்றுத் திறனாளி முகம்மது அலி தன் இடுப்பிற்குக் கீழ் இயங்காத நிலையிலும், இத்தாய் நாட்டினை சார்ந்த அனைத்து இன மக்களும் நிம்மதியாகவும், சகோதர வாஞ்சையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகவும் தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டுமென்பதையும் தன் உயிரையும் துச்சமென நினைத்து இம்முயற்சியை முன்னெடுத்து வருகின்றார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கிய இவரின் பயணம் கொழும்பு காலியை முடித்து தற்போது பொத்துவில், திருக்கோவில் அதனைத் தொடர்ந்து இன்று (09)அக்கரைப்பற்றை சென்றடைந்த அவர் தொடராக கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக மீண்டும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

 முகம்மட் அலி இலங்கை மின்சார சபையில் பணியாற்றிய போது ஏற்பட்ட விபத்தொன்றில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீடியோ : Aafrith
(VIDEO) மாற்றுத் திறனாளி முகம்மது அலியின் பயணம் அக்கரைப்பற்றை அடைந்தது... பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. (VIDEO)  மாற்றுத் திறனாளி முகம்மது அலியின் பயணம் அக்கரைப்பற்றை அடைந்தது... பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. Reviewed by Madawala News on February 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.