நல்லாட்சியில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஒரே நாளில் 10 முறைப்பாடுகள் ..



அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில்  இடம்பெற்ற முறைகேடுகளை
விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஒரே நாளில் 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைப்பாடுகளை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை முன்வைக்க முடியும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

செயலாளர்,                                                                                                                                                                                  அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு,          அறை இலக்கம் 210, 2 ஆம் மாடி,                                                                                                                    பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்,                                                                      பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு – 7

என்ற முகவரிக்கு எழுத்து மூலமான முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர 011- 2665382 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சியில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஒரே நாளில் 10 முறைப்பாடுகள் .. நல்லாட்சியில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஒரே நாளில் 10 முறைப்பாடுகள் .. Reviewed by Madawala News on February 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.