277 கோடி ஹெராயின் உடன் சிக்கியவர்கள் 38 மற்றும் 34 வயதுடையவர்கள். இருவருக்கும் தடுத்து வைத்து விசாரணை. - Madawala News Number 1 Tamil website from Srilanka

277 கோடி ஹெராயின் உடன் சிக்கியவர்கள் 38 மற்றும் 34 வயதுடையவர்கள். இருவருக்கும் தடுத்து வைத்து விசாரணை.பேருவளை பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் 7 நாட்கள் தடுத்து வைத்து
விசாரணை செய்ய அனுமதி வழங்ப்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் பொலிஸாரிற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பலப்பிட்டிய - பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு சுமார் 231 கிலோ கிராம் ஹெரோயின் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட குறித்த ஹெரோயின் சுமார் 2777 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களுடன் அவர்கள் பயணித்த படகும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 34 வயதுடைய இரண்டு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

ஒருவர் ரிஸ்வான் முகம்மத் மற்றவர் துஷார எனவும் மேலும் தெரிய வரு கிறது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
277 கோடி ஹெராயின் உடன் சிக்கியவர்கள் 38 மற்றும் 34 வயதுடையவர்கள். இருவருக்கும் தடுத்து வைத்து விசாரணை. 277 கோடி ஹெராயின் உடன் சிக்கியவர்கள் 38 மற்றும் 34 வயதுடையவர்கள். இருவருக்கும் தடுத்து வைத்து விசாரணை. Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5