வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.


பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட
வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான இன்றைய விசாரணை நிறைவடைந்துள்ளது. 

இந்த மனுக்கள் மீதான விசாரணையை நாளைய தினமும் மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்லது.


அதன்படி பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாளைய தினம் வரை விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீது மூன்றாவது நாளாக இன்று இடம்பெற்ற விசாரணையின் போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. 

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

எவ்வாறாயினும் இந்த மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.
வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. வர்த்தமானி அறிவித்தலுக்கு  விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5