நேற்றைய மூன்று மணிநேர CID விசாரணை தொடர்பில் விளக்குகிறார் மஹிந்த ராஜபக்ஷ .


கீத் நொயார் கடத்தப்பட்ட பின்னர்  தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய என்னை  தொலைபேசியில்
அழைத்தாரா? என்பது குறித்து எனக்கு ஞாபகம் இல்லை என்று தான் சி.ஐ.டி.யினரின் கேள்விக்கு பதிலளித்து தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் தன்னிடம் வாக்கு மூலம் பெற சி.ஐ.டி.யினர் வருகை தந்தமையானது  முற்று முழுதாக அரசியல் தேவைகளுக்காக நிகழ்த்தப்பட்ட விடயம் எனவும் அரசாங்கத்தின் பிரதானிகள் அறியாது என்னிடம் சி.ஐ.டி.யினர் வாக்கு மூலம் பெற வந்திருக்க மாட்டார்கள் என்றும், அவர்களின் தேவைகளுக்காகவே இந்த வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை , சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நொயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை  தொடர்பில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  நேற்று சி.ஐ.டி.யினர் விஷேட விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே முன்னாள் ஜனாஹிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஐவர் வாக்கு மூலம் பெற வந்தனர்.  மூன்று மணி நேரம் வரை வாக்கு மூலம் பதிவு செய்தனர். கரு ஜயசூரிய தொடர்புகொண்டாரா என கேட்டனர். அவர் தொடர்புகொண்ட பின்னர்  கீத் நொயார் விடுவிக்கப்பட்டாரா என கேட்டனர்.  கரு ஜயசூரிய தொடர்புகொண்டாரா என எனக்கு ஞாபகம் இல்லை.  எத்தனை பேர்  தொடர்புகொள்கின்றனர். அதனால் எனக்கு ஞாபகம் இல்லை.  

 இந்த விசாரணைகள் அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இடம்பெறுபவை.  இது தான் இன்று நாட்டின் நிலைமை.  இந்த அரசாங்கத்தின் அரசியல் பழி வாங்கலின் ஒரு வடிவமே இதுவாகும்.

அரசாங்கத்தின் பிரதானிகள் அறியாது சி.ஐ.டி.க்கு என்னை நெருங்க முடியாது.  அவர்களுக்கு இப்படி நடக்காது என அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்ரார்கள்.  இது பழி வாங்கலாகும். இவ்வாறான பழி வாங்கல்கள், இடையூறுகள், மனதை வேதனைப்படுத்தும் நடவடிக்கைகள்  பரந்துள்ளன. நாம் தாக்கியதாக அரசாங்கம் கூறுகின்றது.  என்னிடம் சி.ஐ.டி.யினர், அரச அதிகாரிகளை விமர்சனம் செய்து பத்திரிகையில் செய்திகள் இருந்ததாக கேட்டனர்.   நளார்ந்தம் ஆவ்வாறான செய்திகள் பத்திரிகைகளில் இருப்பதாக நான் கூறினேன். கரு ஜயசூரிய எனக்கு அழைத்த பின்னர் கீத் நொயார் விடுவிக்கப்ப்ட்டாராம். விடுவிக்கப்ப்ட்டமை ஒரு குற்றமா? என நான் கேட்டேன்.

எவ்வாறாயினும் அதில் ஒரு நல்லதும் இருந்தது. கரு எனக்கு இரவு 11.20 மணியளவிலேயே கதைத்துள்ளாராம்.  அதனூடாக நான் இரவு 10.00 மணிக்கெல்லாம் உறங்குவது இல்லை என்பது வெளிப்படுகின்றதல்லவா? என தெரிவித்தார்.

 இதனிடையே மஹிந்த ராஜபக்ஷவிடம்  சி.ஐ.டி.யினர் விசாரணைகளை முன்னெடுக்கும் போது,  விஜேராம இல்லத்தில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம, ' இது ஒரு அரசியல் பழி வாங்கல். முழு நாடும் இதனை அறியும். இது குறித்து கதைத்து பிரயோசனம் இல்லை.  மூன்றரை ஆண்டுகள் கழிந்தே இந்த சம்பவம் அரசாங்கத்துக்கு ஞாபகத்துக்கு வந்துள்ளது.

 ஜனாதிபதித் தேர்தலும், மாகாண சபை தேர்தலும் அண்மித்துள்ள நிலையில், சேறு பூசும் நடவடிக்கையே இது. என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபே குணவர்தன, ' இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்று 3 வருடங்களும் 8 மாதங்களும் ஆகின்றது.  இவர்களிடம் நாட்டு மக்கள் அபிவிருத்தியையும், அதனூடாக தேசிய சொத்துக்களின் பாதுகாப்பையும் எதிர்ப்பார்த்தனர்.  இன்று விஜேராமவில் இந்த அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தி பணி பதிவாகியுள்ளது. அது தான் எங்கள் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்கு மூலம் பெற்ற நடவடிக்கையாகும்.

 அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் தலைவர்களை சி.ஐ.டி., எப்.சி.ஐ.டி., இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு அழைத்து இந்த அரசாங்கம் அடக்க முயல்கிறது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை இந்த அரசாங்கம் கையாளும் விதமே இதுவாகும் என்றார்.
நேற்றைய மூன்று மணிநேர CID விசாரணை தொடர்பில் விளக்குகிறார் மஹிந்த ராஜபக்ஷ . நேற்றைய மூன்று மணிநேர CID விசாரணை தொடர்பில் விளக்குகிறார் மஹிந்த ராஜபக்ஷ . Reviewed by Madawala News on August 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.