நாட்டை நாம் பொறுப்பேற்கும் போது பொருளாதாரத்தில் பாரிய ஆழமான குழி இருந்தது.. பல்வேறு திட்டங்களால் நாம் அதனை நிரப்பினாலும் இன்னும் 500 சதுர அடிக்கு பாரிய குழி ஒன்று உள்ளது.


நாட்டை நாம் பொறுப்பேற்கும் போது நெருக்கடியான பொருளாதாரத்துடன் கூடிய ஆழமான குழி இருந்தது.
தற்போது அந்த குழியை கம்பெரலிய, வீடமைப்பு போன்ற பல்வேறு திட்டங் களினாலும் கடன் மீள்செலுத்தலின் ஊடாகவும் நிரப்பி விட்  டோம். எனினும் 500 சதுர அடிக்கு பாரிய குழி ஒன்று உள்ளது. அதனை இன்னும் நாம் நிரப்பவில்லை. அந்த 500 சதுர  அடி கூட மிகவும் ஆழமாகவே உள்ளது. ஆகவே அந்த ஆழமிக்க  குழியை நிரப்ப வேண்டுமாயின் ராஜபக்ஷவினரை மீண்டும் தலைதூக்க இடமளிக்க கூடாது என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.

அத்துடன் வீடமைப்பு திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம். இதன்பிரகாரம் வடக்கில் 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். கடன் சுமையுடன் கூடிய பொருளாதாரத்தை பொறுப்பேற்று நெருக்கடியான நிலைமையில் மூன்று வருடங்கள் வரை நாம் அரசாங்கத்தை கொண்டு வந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்தின் மூன்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தெவ்புதகம வீடமைப்பு திட்டம் மொனராகலையில் நேற்று மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு பிரதமர ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு வீடமைப்பு திட்டத்தை திறந்து வைத்தோம். ஏற்றுமதி கிராமமொன்றையும் ஆரம்பித்து வைத்தோம். பலருக்கு காணி உறுதியையும் வழங்கினோம். இதன்படி இந்த மாவட்டம் வறுமை கோட்டின் கீழேயே உள்ளது. அத்துடன் இந்த மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இதன்படி மொனராகலையில் பாரிய மாற்றங்களை செய்யவுள்ளோம்.

தற்போது அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் காணிக்கான உறுதி பத்திரத்தை வழங்கி அதன்பின்னர் முழு காணி உரித்துகான பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுப்போம். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட உதா கம்மான திட்டம் 1994 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் வீடமைப்பு திட்டமொன்று இருக்கவில்லை. இதன்போது நாம் ஆட்சிக்கு வந்த போது சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சை கோரியமைக்கு அமைவாக அந்த பொறுப்பை அவருக்கு வழங்கினோம். தற்போது அவர் அர்ப்பனிப்புடன் செயற்பட்டு வருகின்றார். 2500 கிராமங்களை உருவாக்கும் நோக்குடன் அவர் செயற்பட்டு வருகின்றார்.

வீடமைப்பு துறைக்கான முதலீடுகளை நாம் அதிகரித்துள்ளோம். 2014 ஆம் ஆண்டு வீடமைப்புக்கு 7800 மில்லியன் ரூபாவே முதலீடு செய்யப்பட்டது. ஆனால் 2016 ஆம் ஆண்டு 19 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே வீடமைப்பு மற்றும் பொது வசதிகளுக்கான முதலீடுகளை இரு மடங்காக அதிகரித்துள்ளோம். மத்திய தரத்தில் உள்ளவர்களுக்கும் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அதேபோன்று இந்தியாவின் நிதிஉதவியுடன் பெருந்தோட்ட மக்களுக்கான மகாத்தமா காந்திபுர வீட்டு திட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டது. அதனை தவிர வடக்கில் 40 ஆயிரம் வீட்டு திட்டமும் நிர்மாணிக்க துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

சுகாதார சேவையிலும் பாரிய மாற்றங்களை செய்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றோம். சுவசெரிய சேவையை நாடுபூராகவும் விஸ்தரிக்கவுள்ளோம். அருகாமை பாடசாலையை சிறந்த பாடசாலை என்ற வகையில் நிர்மாணித்து வருகின்றோம். சுரக்ஷா காப்புறுதியை மாணவர்களுக்கு வழங்கினோம்.
நாட்டில் பல்வேறு துறைகளில் நாம் மாற்றம் செய்தோம். ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட ஜி.எஸ்.பி வரி சலுகையையும் மீன் இறக்குமதி தடையையும் நீக்கினோம். இதனால் அதிகளவு ஏற்றுமதி வருமானம் எமக்கு கிடைக்கப்பெற்றது. வாழ்க்கை செலவைகுறைப்பதற்காகவும் சேவைகளை செய்துள்ளோம். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, சமுர்த்தி கொடுப்பனவு போன்றவற்றை அதிகரித்தோம். இதன் ஊடாக வாழ்க்கை செலவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினையும் நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். வரட்சி காரணமாக அதிகரிப்புக்குள்ளான அத்தியாவசிய பொருளட்களை நாம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். எனினும் விலை அதிகரிப்பும் குறைப்பும் மாறி மாறி முன்னெடுக்கப்படுவது சாதாரணமான விடயமாகும்.

மூன்றாண்டுகளில் நாம் செய்த சேவையை புத்தமாக எழுதலாம். அத்துடன் ஜனநாயகத்தையும் நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளோம். நீதிமன்றத்தை சுயாதீனமாக்கியுள்ளோம். நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் தனக்குக்கும் எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நீதித்துறையில் நானோ ஜனாதிபதியோ தலையிடுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு கண்காணிப்பதற்கு பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளோம். காணாமல் போனோர் அலுவலகம் நிறுவினோம். உள்ளூராட்சி மன்றங்களுக்கான பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தோம்.

கடன் செலுத்த முடியாமையின் காரணமாக நேரக்காலத்துடன் முன்னைய ஆட்சியினர் ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றனர். நெருக்கடியான நிலைமையில் மூன்றாண்டுகள் அரசாங்கத்தை கொண்டு வந்தோம். செலவினை குறைத்து வருமானத்தை அதிகரித்தோம். வரட்சி, கடன், பெற்றோலி விலை அதிகரிப்பினையும் பொறுட்படுத்தமாமல் நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றினோம். கடனையும் வட்டி தவனையையும் செலுத்துவதற்கு எமக்கு போதுமான அளவு வருமான இருக்கவில்லை. இதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடினோம். 2025ஆம் ஆண்டு கடன் சுமையை குறைக்க முடியும்.

அத்துடன் துறைமுக நகரின் முழு உரித்துரிமையையும் சீனா வழங்கியதை நாம் ஆட்சிக்கு வந்தவுடன் குத்தகையாக மாற்றினோம். அத்துடன் அம்பாந்தோட்டையில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். பாரியளவிலான முதலீட்டு வலயங்களை ஆரம்பித்து தொழில்வாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். கண்டி முதல் அம்பாந்தோட்டை வரை அதிவேக வீதி கட்டமைப்பினை உருவாக்கவுள்ளோம். மத்திய அதிவேக பாதை நிர்மாண பணிகளை ஆரம்பித்துள்ளோம். மொரகஹகந்த மற்றும் களுகங்கை திட்டத்தையும் செயற்படுத்தியுள்ளோம்.

நாம் ஆட்சியை பொறுப்பேற்கும் போது கடன் சுமையுடன் கூடிய நெருக்கடியான பொருளாதாரம் என்ற ஆழமான குழி இருந்தது. தற்போது அந்த குழியை கம்பெரலிய, வீடமைப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களினாலும் கடன் மீள்செலுத்தலின் ஊடாக நிரப்பி விட்டோம். எனினும் 500 சதுர அடியை நாம் இன்னும் நிரப்பவில்லை. அந்த 500 சதுர அடி கூட மிகவும் ஆழமானது. ஆகவே அந்த ஆழத்தை நிரப்ப வேண்டுமாயின் ராஜபக்ஷவினரை மீண்டும் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் என்றார்.

நாட்டை நாம் பொறுப்பேற்கும் போது பொருளாதாரத்தில் பாரிய ஆழமான குழி இருந்தது.. பல்வேறு திட்டங்களால் நாம் அதனை நிரப்பினாலும் இன்னும் 500 சதுர அடிக்கு பாரிய குழி ஒன்று உள்ளது. நாட்டை நாம் பொறுப்பேற்கும் போது பொருளாதாரத்தில் பாரிய  ஆழமான குழி இருந்தது.. பல்வேறு திட்டங்களால் நாம் அதனை நிரப்பினாலும் இன்னும் 500 சதுர அடிக்கு பாரிய குழி ஒன்று உள்ளது. Reviewed by Madawala News on August 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.