வீதி விபத்தில் தாத்தா - பேரன் - பேத்தி மூவரும் உயிரிழப்புஎல்பிட்டிய-அவித்தாவ பிரதான வீதியில் கட்டபால கிறிஸ்துவ தேவாலயத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்று கொள்கலனுடன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் கராப்பிட்டிய 
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையிலும் கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியான எல்பிட்டிய, வல்லம்பகல, சுகதபால மாவத்தையைச் சேர்ந்த கலிங்க நிஹால் சோமரத்ன என்ற 68 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையும் அவரது பேரனும், பேத்தியும் உயிரிழந்துள்ளனர்.

தினுல பெர்னாண்டோ (10) மற்றும் பேத்தி செனுலி பெர்னாண்டோ (07) ஆகிய இரு பிள்ளைகளாவர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்த சாரதியின் மனைவி (61) மற்றும் அவரது மகள் (35) ஆகியோர் தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் அவரது பத்து வயது பேத்தி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்பிட்டியவில் இருந்து அவித்தாவ நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், கேன்டர் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.வீதி விபத்தில் தாத்தா - பேரன் - பேத்தி மூவரும் உயிரிழப்பு வீதி விபத்தில் தாத்தா - பேரன் - பேத்தி மூவரும் உயிரிழப்பு Reviewed by Madawala News on April 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.