சம்மாந்துறை ஹோட்டல்களில் "அதிக அஜினமோட்டோ" கலந்த சம்பலால் பாதிப்பு - சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கோரிக்கைசம்மாந்துறையில் உள்ள ஹோட்டோல்களில் "அஜினமோட்டோ" கூடுதலாக இட்டு புளிந்த தேங்காயில் சம்பல் செய்து அதிகமாக மக்களுக்கு இரவு நேரங்களில் அள்ளி வழங்குகின்ற ஹோட்டல்கள் சில சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

நானும் எனது நண்பர்களும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பராட்டாவும் சம்பலும் வாங்கினோம்.

சாப்பிட்ட பின் ஓரிரு மனித்தியாளங்கள் கழித்து உடம்பில் அறிப்பு ஏற்பட்டு அங்கங்கோ மஸ்குட்டி உடம்பில் பட்டால் எப்படி இருக்கும் அது போன்று போன்று உடம்பில் தாங்க முடிதாக அறிப்பு ஏற்பட்டது.

இதுவரை காலமாகவும் எனது வாழ்க்கையில் இவ்வாறான சம்பவம் (அலர்ஜி) இடம் பெறவில்லை. இதுவே முதல் தடவை

இது தொடர்பாக வைத்திய ஆலோசனை பெற்ற நான் ஓரளவு சரி ஆகி விட்டது.


வைத்தியரும் ஒரு சில ஆலோசனைகளை கூறினார். என்ன சாப்டீங்க? என்று கேட்க பராட்டா சம்பல் மட்டும் என்றேன்.

இறுதியாக அது மட்டும்தான் சாப்பிட்டேன் என்றேன் சம்பலில் நல்ல ரசமாக இருந்தது கூடுதலாக இருந்ததால் நிறைய சாப்பிட்டன் என்றேன் .

இவ்வாறு பல பேருக்கு இது பேன்ற சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கூறினார்.மூன்று நாளைக்கு இந்த மாத்திரைகளை உபயோகியுங்கள்.

இனி இது போன்ற சாப்பாடுகளை தவிர்ப்பது நல்லது.

ஒரு நாளைக்கு போட்டால் நின்றுவிட்டது என்று இல்லாமல் 3நாள் பாவியுங்கள் என்பது மட்டுமில்லாமல் எனது சந்தேகங்களுக்கும் பல தெளிவூட்டல்களை வழங்கினார்.

ஆனால் என்னைப்போன்று பல பேர் இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அறிகின்றேன். எனக்கும் என் நண்பர்களுக்கும் நடந்த இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்ககூடாது சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நம்புகின்றேன்.

"அஜினமோட்டோ" பாவனையை குறைப்போம்.🤝

ஐ.எல்.எம் நாஸிம்
(ஊடகவியலாளர்)
சம்மாந்துறை ஹோட்டல்களில் "அதிக அஜினமோட்டோ" கலந்த சம்பலால் பாதிப்பு - சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை சம்மாந்துறை ஹோட்டல்களில் "அதிக அஜினமோட்டோ" கலந்த சம்பலால் பாதிப்பு - சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை Reviewed by Madawala News on April 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.