உலகின் மிகப்பெரிய பாம்பு இந்தியாவில்குஜராத்தில் 2005ல் கண்டறியப்பட்ட புதைபடிமப் பொருள், 47 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த, 'வாசுகி' இன பாம்பைச் சேர்ந்தவை என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் அருகே, 2005ம் ஆண்டு தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மிக நீளமான உருவ அமைப்புடன் கூடிய படிமப் பொருள் ஒன்றை கண்டறிந்தனர். அது, முதலை இனமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதினர்.

எனினும், அந்த படிமப்பொருள் தொடர்பாக உத்தரகண்டில் உள்ள ஐ.ஐ.டி., ரூர்க்கியைச் சேர்ந்த டெபாஜித் தத்தா, சுனில் பாஜ்பாய் ஆகிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இவர்களது ஆய்வுக் கட்டுரை, 'ஜர்னல் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்' என்ற அறிவியல் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கட்டுரையில், 'கடந்த 2023ல் கட்ச் பகுதியில் கண்டறியப்பட்ட புதைபடிமப் பொருளில், 27 பாகங்களின் எலும்புகளை ஆய்வு செய்தபோது, அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருந்தது. அது, மிக நீளமான பாம்பு இனத்தைச் சேர்ந்தது.

குறிப்பாக, இது, பழங்காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்பட்ட வாசுகி பாம்பு இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்' என தெரிவித்துள்ளனர்.

'இதன் நீளம் 36 அடி முதல் 50 அடி வரை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட மற்றும் உருளை வடிவமாக இந்த பாம்பு இருந்திருக்கும்.

'முழுமையான எலும்புக்கூடு இல்லாததால், இந்த பாம்பின் மொத்த நீளம் எவ்வளவு என்பதை கண்டறிய முடியவில்லை' என, விஞ்ஞானிகள்தங்கள் ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக்காட்டிஉள்ளனர்.

இதற்கு முன், தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் நடந்த புதை படிவ ஆராய்ச்சியில், அழிந்துபோன உயிரினமான டைட்டானோபோவா என்ற மிகப்பெரிய பாம்பு இனத்தின் முழு உடல் பாகங்கள் கண்டறியப்பட்டன. பாம்பின் நீளம் 43 அடியாக இருந்தது.

வாசுகி பாம்பு, புராணங்களில் நாகங்களின் அரசனாக திகழ்ந்ததாகவும், 50 அடி வரை வளரக்கூடியதாக இருந்தாகவும் கூறப்படுகிறது.
- Dinamalar
உலகின் மிகப்பெரிய பாம்பு இந்தியாவில் உலகின் மிகப்பெரிய பாம்பு இந்தியாவில் Reviewed by Madawala News on April 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.