பூனைகளினால் பரவக்கூடிய நோய்கள்.பூனைகள் பலரது வீட்டுப் பிராணியாகவும் செல்லப்பிராணியாகவும் காணப்படுகிறது.

பூனை வளர்த்தல் மனதுக்கு மகிழ்ச்சியையும், உளரீதியான ஆதரவு, மனநிலையை மேம்படுத்தல், மன உளைச்சலுக்கு ஆளானோர்க்கு உறுதுணை போன்றவற்றை வழங்குவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பூனைகளுடன் தொடர்புபடுதல் பல நோய்களும் பரவ வழிவகுக்கும்.

🛑 பூனைகளினால் பரவக்கூடிய நோய்கள். By: Dr Ziyad A.I.A

⁉️ பின்வரும் வழிகளில் பூனைகளினால் நோய்கள் பரவலாம்.

✅ 01. பூனை நகங்களால் விராண்டுதல் / கீறுதல்

✅ 02. கடித்தல் / உமிழ் நீர்

✅ 03. மலம்

✅ 04. தோல் / முடி

⁉️ பூனைகளால் பொதுவாக மனிதனுக்கு ஏற்படக்கூடிய / பரவக்கூடிய நோய்கள்:

🛑 01. Cat Scratch Disease:
இது Bartonella Hensale எனும் பக்றீரியாவினால் ஏற்படுகிறது.
நோயின் பெயரில் குறிப்பிட்டது போல் இது பூனை நகத்தினால் விராண்டுதல் அல்லது கடித்தல் அல்லது மனிதனின் காயம் உள்ள தோல் பகுதியில் பூனை நக்குதல் போன்றவற்றால் பரவுகிறது.

நோய்த்தொற்று பரவியவர்களில் வீக்கம், காய்ச்சல் போன்ற நோயறிகுறிகள் தோன்றும். இதற்கு Antibiotics மருந்துகள் தேவைப்படலாம்.

பொதுவாக 40%ஆன பூனைகள் தன் வாழ்வில் ஒருமுறையாவது இந்த பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகும் என ஆய்வு தெரிவிக்கிறது. 

🛑 02. Rabies:
Rabies என்பது நரம்பு மண்டலத்தை தாக்கி உயிராபத்தை உண்டாக்கும் நோயாகும். இது பொதுவாக நாய்களால் பரவுவதால் "விசர் நாய்க்கடி" நோய் என அழைக்கப்படுகிறது.

இருந்தாலும் இது பூனை கடியினாலும் பரவும். இலங்கையில் 10%மான Rabies பூனை கடியினால் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேற்கத்திய நாடுகளில் நாய்களைப் போலவே பூனைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. 

இலங்கையை பொறுத்த வரையில் பூனைகள் தானாக வளரும் வீட்டுப் பிராணியாக இருப்பதால் அதற்கு தடுப்பூசி பற்றி பலரும் கவனம் எடுப்பதில்லை. இதனால் பூனைக் கடிக்கு உள்ளானால் கட்டாயமாக வைத்தியசாலைக்குச் சென்று Rabies தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

🛑 03. Compylobacteriosis எனும் வயிற்றுளைவு நோய்:

பூனைகள் Compylobacter எனும் பக்றீரியா தொற்றுக்கு உள்ளாகும்போது அவற்றின் மலத்தின் ஊடாக கிருமிகள் வெளி வரும். இவை பூனைகள் விளையாடும் கட்டில் மெத்தைகள் விளையாட்டுப் பொருட்களில் தொடுகையுறும்போது  அதனை மனிதன் கையாள்வதால் மனிதனுக்கு பரவும். 

இதனால் 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பாதிப்படையக் கூடும். 

பொதுவாக காய்ச்சல் மற்றும் இரத்தத்துடன் கூடிய வயிற்றுளைவு இதன் அறிகுறிகளாக இருக்கும். 

 செல்லப்பிராணிகளை கையாளும்போது அடிக்கடி கை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

04. Tetanus:
பூனை உட்பட பொதுவாக விலங்குகள் கடிக்கும் போது Tetanus (ஈர்ப்புவலி) தொற்று பரவ வாய்ப்பு உண்டு. இதனால் பொதுவாக மிருகக் கடிபட்ட உடன் Tetanus தடுப்பூசி வழங்கப்படுகிறது. 

🛑05. புழுத் தொற்றுகள்:
பொதுவாக பூனையின் மலம் மற்றும் உமிழ் நீர் ஊடாக புழுத்தொற்றுக்கள் பரவலாம். 
Cat Tapeworm 
Cryptosporidiosis 
Giardiasis 
Hookworm 
Roundworms 
Toxoplasmosis 
என பட்டியல் நீண்டு செல்லும். 

பூனையை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்கள் காலாகாலத்துக்கு பூனைகளுக்கும் புழுத்தொற்று மருந்துகள் கொடுப்பது அவசியமாகும். 

05. Allergy / Asthma:
பூனையின் முடி சிலருக்கு Allergy தும்மலை ஏற்படுத்தலாம். வீட்டில் அஸ்மா நோயாளிகள் இருந்தால் அவர்களுக்கு சில வேளை பூனையின் முடி காற்றில் பரவி நோயை அதிகரிக்கலாம் (exacerbation).

06. இது போக மேலும் பல Bacteria நோய்களான:
Yersinia Pestis (Plague)
Salmonellosis 
Tularaemia 
Ringworm எனும் Fungus தொற்று
போன்றவையும் தொற்றுக்குள்ளான பூனையை தொடுதல், அவற்றின் மலசலங்கள் உணவு, நீரில் கலத்தல் போன்றவற்றால் ஏற்படலாம். 

⁉️ பூனையினால் பரவும் நோய்களை தடுப்பதற்கான வழிகள்? 

✅ செல்லப்பிராணிகள், பூனைகளை கையாளும்போது அடிக்கடி கை கழுவுதல். 

✅ பூனைகள் காயங்களை, முகத்தை நக்குவதை தவிர்த்துக் கொள்ளல்.

✅ வருடத்துக்கு ஒரு முறையாவது வளர்ப்பு பிராணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி புழுத்தொற்று மற்றும் தேவையான மருந்துகளை வழங்கல். 

✅ வளர்ப்பு பூனைகளுக்கு வருடா வருடம் Rabies தடுப்பூசி போட்டுக் கொள்ளல்.

✅ பூனைகள் தோல் நோய்களுக்கு உட்பட்டிருந்தால் மிருக வைத்தியரை நாடி மருந்துகளை பெற்றுக் கொள்ள ல்.

✅ குழந்தைகள், வயோதிபர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் பூனைகளை கையாள்வதை தவிர்த்துக் கொள்ளல்.

✅ பூனைகள் மலசலம் கழிக்க தனியான இடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அடிக்கடி பாதுகாப்பாக அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். 

✅ பூனையின் நகக் கீறலிலிருந்து தவிர்ந்து கொள்ள பழக்கம் இல்லாத பூனைகளைகையாள்வதை தவிர்ப்பதோடு பூனைகளை ஆக்ரோஷமாக கையாள்வதையும் தவிர்க்க வேண்டும். 

⁉️ பூனை கடித்தால் அல்லது நகக்கீறள் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? 

✅ Soap  நீரினால் கடிபட்ட இடத்தை நன்றாக கழுவ வேண்டும். 

✅ தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத பூனை கடித்தால் உடனடியாக வைத்தியசாலையை அனுகி Rabies தடுப்பூசியை தொடர்ச்சியாக பெறவேண்டும். 

🛑🛑
✅ கடித்த அல்லது விராண்டிய பூனை நோய்வாய்ப்பட்டதாக தென்பட்டாலோ, காயம் பெரிதாக ஏற்பட்டாலோ,  கடித்த பின் காய்ச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக வைத்திய உதவியை நாட வேண்டும்.

By: Dr Ziyad Aia 
MD - Health Informatics 


#catbite 
#catscratchfever 
#CatScratchDisease 
#ziyadaia
பூனைகளினால் பரவக்கூடிய நோய்கள். பூனைகளினால் பரவக்கூடிய நோய்கள். Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.