வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட் ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு.கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பதிவானது

இந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளான் .

வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் சிலையே சிறுவனின் உடலில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் 8 வயது சிறுவனே உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட் ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு. வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட்  ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு. Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.