உள்நாட்டு பால்மா உற்பத்தியை பாதுகாக்க இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது - வர்த்தக அமைச்சர்

உள்நாட்டு பால்மா உற்பத்தியை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பால் மா இறக்குமதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே வர்த்தக அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இங்கு மேலும் கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர்...


உள்நாட்டு பால்மா உற்பத்தியை பாதுகாக்கவும், பால் மா இறக்குமதியை குறைக்கும் வகையிலும் இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன. 60/70 ரூபாவாக இருந்த ஒரு லீட்டர் பால் தற்போது 180 ரூபாவாக உயர்ந்துள்ளது. ஒரு லீட்டர் பாலுக்கு கிடைக்கும் விலையின் அடிப்படையில் இந்நாட்டின் பால் பண்ணையாளர் பலப்படுத்தப்படுகிறார். கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர், பசுக்கன்றுகளை வளர்ப்பதில் பெரும் சிக்கல்கள் எழுந்தன. பால் உற்பத்தி தொழில் பெருமளவில் சரிந்தது.


அத்துடன், பாலுக்கு மட்டுமன்றி 20 அத்தியாவசியப் பொருட்களுக்கான அறிக்கையை தயாரித்து அமைச்சரவையில் சமர்பிக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.


உருளைக்கிழங்கு, வெங்காயம், பால் உள்ளிட்ட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அளவின் குறைபாடு/ பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான சிபாரிசு உட்படுத்திய அறிக்கையொன்றைத் தயாரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த அறிக்கை விவசாய அமைச்சின் தரவுகளின்படி  தயாரிக்கப்படும் என்றும், இதனால் அத்தியாவசியப் பொருட்கள்  சந்தையில் குறைவின்றி காணப்படுவதை உறுபடுத்த முடியும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு பால்மா உற்பத்தியை பாதுகாக்க இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது - வர்த்தக அமைச்சர் உள்நாட்டு பால்மா உற்பத்தியை பாதுகாக்க இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது - வர்த்தக அமைச்சர் Reviewed by Madawala News on January 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.