ஒரு டொலர் கூட இல்லாத நிலையிலேயே நாம் இந்த நாட்டை பொறுப்பேற்றோம்.. ஆனால் இன்று எம்மிடம் 3.6 பில்லியன் டொலர்கள் கையிருப்பு உள்ளது ; அமைச்சர் மனுஷஒரு டொலர் கூட இல்லாத நிலையிலேயே நாம் இந்த நாட்டை பொறுப்பேற்றோம்.

மத்திய வங்கியின் டொலர் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் எமது புலம்பெயர் தொழிலாளர்களின் கைகளில் இருந்தன என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.


அதிபர் ஊடக மையத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு முறையும் பிரபலமான முடிவுகள் எடுக்கப்பட்டபோது ஒரு நாடாக நாம் தோல்வியடைந்துள்ளோம்.


இதில் இருந்து எதிர்க்கட்சிகள் கூட தப்ப முடியாது. அவர்களும் நாட்டின் அபிவிருத்திக்காக முடிவுகளை எடுக்கும்போது அவற்றை எதிர்த்ததும் பிரபலமான தீர்மானம் என்பதால்தான். மேலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அவற்றை எதிர்த்தனர்.


இறுதியில், நமது நாடு ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து.


நாடு எதிர்கொண்ட நெருக்கடியின் போது, இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டதால் தான் இந்தப் பொறுப்பை ஏற்க முடியாது எனப் பின்வாங்கினர்.

அவர்களை போலவே அதிபரும் நாமும் இந்தப் பொறுப்பை மறுத்திருந்தால் எதிர்கட்சியினரின் பேரணிகளுக்கு பஸ்களில் கூட மக்கள் வந்திருக்கமாட்டார்கள்.


இப்போது எங்கள் மீது குற்றம் சாட்டும் சிலருக்கு நாங்கள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தமை நினைவில் இல்லை. அவர்கள் அரசாங்கத்தில் இருந்தார்கள். எதிர்க்கட்சியில் இருந்து வந்தே இதனைச் செய்தோம்.

டொலர் கையிருப்பு
மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு இன்று 3.6 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டால், இந்நாட்டில் டொலர்கள் இல்லாமல், எதையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.நாங்கள் ஆட்சிக்கு வருகின்ற காலத்தில் அப்போது, நினைத்தவாறு பணம் அச்சிடப்பட்டது. அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தது. கடந்த ஆண்டு இறுதியில் ஒரு டொலர் 365 ரூபாவாக இருந்தது.

டொலரின் பெறுமதி 600 ரூபாவிலிருந்து 700 ரூபா வரை அதிகரிக்கும் என்று அக் காலத்தில் எதிர்வுகூறப்பட்டது.


ஆனால் இன்றைய நிலவரப்படி டொலரின் பெறுமதியை சுமார் 320 ரூபாவுக்கு கொண்டு வர முடிந்துள்ளது. டொலரின் பெறுமதி 11% சதவீதத்தினால் குறைந்துள்ளது.


இவ்வாறு நாம் அக்கால நிலைமையை மாற்றவில்லையென்றால் வெளிநாட்டில் கல்வி கற்கும் பிள்ளைக்கு பணத்தை அனுப்ப முடியாத நிலை தோன்றியிருக்கும் என மேலும் தெரிவித்தார்.
ஒரு டொலர் கூட இல்லாத நிலையிலேயே நாம் இந்த நாட்டை பொறுப்பேற்றோம்.. ஆனால் இன்று எம்மிடம் 3.6 பில்லியன் டொலர்கள் கையிருப்பு உள்ளது ; அமைச்சர் மனுஷ ஒரு டொலர் கூட இல்லாத நிலையிலேயே நாம் இந்த நாட்டை பொறுப்பேற்றோம்.. ஆனால் இன்று எம்மிடம் 3.6 பில்லியன் டொலர்கள் கையிருப்பு உள்ளது ; அமைச்சர் மனுஷ Reviewed by Madawala News on December 23, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.