மாணவர்களை இலக்கு வைத்து வெடிகுண்டு மிரட்டலால் ஏற்பட்ட பரபரப்பு.


 மாணவர்களை இலக்கு வைத்து வெடிகுண்டு மிரட்டலால் ஏற்பட்ட பரபரப்பு.

வவுனியா நகரப்பகுதிக்குள் மாணவர்களை இலக்குவைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலய காவலாளியிடம் தெரிவிக்கப்பட்ட தகவலால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,


வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலத்திற்கு இன்றையதினம் சென்ற இருவர் தம்மை பொலிசார் என அடையாளப் படுத்தியதுடன், பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்குவைத்து இந்தப் பகுதிக்குள் இரண்டு குண்டுதாரிகள் நடமாடித்திரிவதுடன், இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் என்ற தகவலை கூறிச்சென்றுள்ளனர்.


குறித்த தகவலை கடமையில் இருந்த காவலாளி பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.


எனினும் குறித்த விடயம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் கேட்டபோது, பொலிசார் என அடையாளப்படுத்திய இருவர் மேற்குறித்த தகவலை காவலாளியிடம் கூறிச்சென்றதை உறுதிப்படுத்தியிருந்தார்.


எனினும் உத்தியோகபூர்வமாக குறித்த தகவல் வவுனியா பொலிசாரால் எமக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர்


இதேவேளை குறித்த தகவல் காரணமாக நகரப்பாடசாலைகளுக்கு முன்பாக பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாணவர்களை இலக்கு வைத்து வெடிகுண்டு மிரட்டலால் ஏற்பட்ட பரபரப்பு.  மாணவர்களை இலக்கு வைத்து வெடிகுண்டு மிரட்டலால் ஏற்பட்ட  பரபரப்பு. Reviewed by Madawala News on May 25, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.