
இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற நான் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மறைந்த அமைச்சர் லலித் எத்துலத்முதலியின் 86ஆவது பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக வங்கி முறைமையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
லலித் எத்துலத்முதலியின் கருத்தானது இலங்கையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக்கூடிய கருத்தாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் லலித் எத்துலத்முதலியின் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் நிறுவவுள்ளதாக குறிப்பிட்டார்.
இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற நான் தயாராக இல்லை
Reviewed by Madawala News
on
November 23, 2022
Rating:
இனியும் எங்கே மாற்ற வேண்டும். ??? அது ஏற்கனவே பிச்சைக்கார நாடாக ராஜ பக்ஷஹர்ஹலால் maatrapattu தான்
ReplyDelete