மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது - சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் ; கல்வி அமைச்சர்



கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இந்த தாமதம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020 சாதாரண தரப்பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தார்கள்.

இதில் 1 இலட்சத்து 69 ஆயிரம் பரீட்சார்த்திகள் நுண்கலை சார்ந்த பாடங்களைத் தெரிவு செய்திருந்தார்கள்.

தற்சமயம் நிலவும் கொவிட் வைரஸ் பரவலினால் நுண்கலை சார்ந்த பாடங்களை தெரிவு செய்த பரீட்சார்த்திகளுக்கான செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்றும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.

செய்முறைப் பரீட்சையை நடத்தி பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்த்திருந்தாலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமையானது, மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது - சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் ; கல்வி அமைச்சர் மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது -  சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் ; கல்வி அமைச்சர் Reviewed by Madawala News on October 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.