நைட் லைப்” செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பேசும்போது, நான் ​​விபசாரத்தை குறிப்பிடவில்லை



இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பேசும்போது, தான் ​​விபசாரத்தை குறிப்பிடவில்லை என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இரவு வாழ்க்கை விபசாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்தார். 


நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது கலாசாரம் மற்றும் மதம் பற்றி பேசுபவர்கள் இலங்கையை எவ்வித அபிவிருத்தியும் இன்றி தேக்கமடையச் செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.


இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நாட்டை முன்னேற்ற முயற்சி எடுக்கும்போது சிலர் கலாசாரம் மற்றும் மதம் பற்றி பேசத் தொடங்குகிறார்கள். துறவிகள்கூட என்னை விமர்சித்துள்ளனர். மதம் பற்றி பேசி என்னை விமர்சிப்பவர்கள் பௌத்தம் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.


மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். நான் இந்த முன்மொழிவை முன்பே செய்துள்ளேன். மீண்டும் ஒரு முறை முன்மொழிய விரும்புகிறேன்.


மதுக்கடைகளை முன்கூட்டியே மூடும் போது பின்வாசல் வழியாக அனுமதியின்றி விற்பனை நடக்கிறது. இதுபோன்ற விற்பனை மூலம் அரசு வரி வசூலிக்க முடியாது. அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் பீர் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்றும் நான் முன்மொழிகிறேன். ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இரவில் சிறிது மதுபானம் வாங்க முடியும்.


கஞ்சா தோட்டத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் நான் முன்மொழிந்தேன்.  அது மக்கள் சாலையோரத்தில் கஞ்சா எடுப்பதை அங்கீகரிக்க வேண்டுமென நான் கூறவில்லை. கஞ்சாவை ஆயுர்வேத மருந்தாக விளம்பரப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து” என அவர் மேலும் தெரிவித்தார்.

நைட் லைப்” செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பேசும்போது, நான் ​​விபசாரத்தை குறிப்பிடவில்லை நைட் லைப்” செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பேசும்போது, நான் ​​விபசாரத்தை குறிப்பிடவில்லை Reviewed by Madawala News on September 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.