சமபோஷ பக்கெட்டை திருடிய குற்றச்சாட்டில் 51 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை . ஜனாதிபதியின் வீட்டிலிருந்த சமபோஷ பக்கெட்டை திருடிய குற்றச்சாட்டில் 51 நாட்களாக விளக்கமறியலில்

வைக்கப்பட்டிருந்தவர் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


ஜனாதிபதியின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கோட்டை நீதவான் திலின கமகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.


சந்தேகநபர்கள் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை, அவர்கள் 22 முதல் 29 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்கின்றமை மற்றும் விசாரணை ஓரளவு முன்னெடுக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற்கொண்டு பிணை வழங்க தீர்மானித்ததாக நீதவான் கூறியுள்ளார்.  

சமபோஷ பக்கெட்டை திருடிய குற்றச்சாட்டில் 51 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை .  சமபோஷ பக்கெட்டை திருடிய குற்றச்சாட்டில் 51 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்    5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை . Reviewed by Madawala News on September 22, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.