எமது பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒன்றிய சம்மேளனம் நேற்று அறிவித்தது.


எனினும், குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாக, அதன் பிரதிநிதிகள் தமது சங்கத்தினருடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
எமது பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. எமது பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.