கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரையில் நான் எந்த பதவியும் ஏற்க மாட்டேன் ; வதந்திளுக்கு சரத் பொன்சேக்கா முற்றுப்புள்ளி.பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் 
பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பீல்ட் மார்ஷல் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.

இடைக்கால ஐக்கிய அரசாங்கத்திற்கான கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாததன் காரணமாக தற்போதைய அரசியல் முட்டுக்கட்டையை முறியடிக்கும் புதிய முயற்சியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் தொடர்பு கொண்டு பிரதமர் பதவியை வழங்கவுள்ளதாக டேய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. .

எவ்வாறாயினும், தாம் பிரதமராக நியமிக்கப்படும் பட்சத்தில், நாட்டை ஆளக்கூடிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறுவதற்கு தனக்குப் பின்னால் பலம் உள்ளதை எம்.பி. பொன்சேகா நிரூபிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரையில் அவர் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

போலியான செய்திகளுக்கு நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு காலிமுகத்திடலில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு நிபந்தனைகள் இன்றி ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரையில் நான் எந்த பதவியும் ஏற்க மாட்டேன் ; வதந்திளுக்கு சரத் பொன்சேக்கா முற்றுப்புள்ளி.  கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரையில் நான் எந்த பதவியும் ஏற்க மாட்டேன் ; வதந்திளுக்கு சரத் பொன்சேக்கா முற்றுப்புள்ளி. Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.