நாளை (ஜனவரி 15) முதல் பொதுமக்களுக்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை அனுபவம்...மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம்

(அதுகல்புர நுழைவாயில்) ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ


மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 2022 ஜனவரி 15 ஆம் திகதி அதிமேதகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என  ஆளும் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.


மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் நீளம் 40.91 கி.மீ. களாகும்.சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பைக் குறைப்பதற்காக கட்டப்பட்ட இந்த நெடுஞ்சாலை நகர்ப்புறங்களைத் தவிர்த்து, முக்கியமாக வெற்றுநிலங்கள் வழியாகச் செல்லும். 4 வழிப்பாதையாக  நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதியின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான வீதி தற்போது இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை பகுதி  உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் உள்ளூர் நிதியில் அமைக்கப்பட்டது. மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் பணம் செலுத்தும் கவுன்ட்டர்களுடன் ஐந்து பரிமாற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 137 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது

 

ஊடகப்பிரிவு

நெடுஞ்சாலை அமைச்சு

நாளை (ஜனவரி 15) முதல் பொதுமக்களுக்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை அனுபவம்... நாளை  (ஜனவரி 15) முதல் பொதுமக்களுக்கு புதிய  அதிவேக நெடுஞ்சாலை அனுபவம்... Reviewed by Madawala News on January 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.