வெள்ளைப் பூண்டு விவகாரத்தில் இரண்டு பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சதொச வெள்ளைப் பூண்டு மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட

தரப்பினருக்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சதொச சார்பில் பூண்டுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


இவர்களுக்கு இதற்கு முன்னரும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கோட்டை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 11ஆம் திகதியும் குறித்த நபர்களுக்கு தொலைபேசி ஊடாக கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாதிக்கப்பட்ட தரப்பினர் நேற்று (13) குற்றங்கள் மற்றும் சாட்சிகளில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு விஜயம் செய்து இதுகுறித்து தெரிவித்திருந்தனர்.


தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் இன்று (14) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளனர்.

வெள்ளைப் பூண்டு விவகாரத்தில் இரண்டு பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. வெள்ளைப் பூண்டு விவகாரத்தில் இரண்டு பேருக்கு  கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. Reviewed by Madawala News on January 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.