கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு._ஹஸ்பர் ஏ ஹலீம்_

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும்

முகமாக இன்று (25) கிண்ணியா  சிவில் சமூகம் இணைந்து கடைகள்,பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளை நிற கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது பிரதான வீதிகள் கடைகள் அரச திணைக்களங்கள் வங்கிகள் ,பள்ளிவாயல்கள்,வீடுகள் என பல இடங்களிலும்  வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டன. உயிரிழந்த நான்கு மாணவர்கள் உட்பட ஆறு உயிரிழப்புக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை மக்கள் தெரிவிக்கான்றனர். 


முள்ளிப்பொத்தானை கோட்ட பாடசாலைகளிலும் பாடசாலை இடம் பெறாமல் வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டு துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு.  கிண்ணியாவில் இன்று  துக்க தினம் அனுஷ்டிப்பு. Reviewed by Madawala News on November 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.