அரசாங்கமே எமக்கு பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து சேறு பூசுகிறது.... சற்றுமுன் பாராளுமன்றில் அரசை போட்டுத்தாக்கி பேசிய மைத்திரி



 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக அரசாங்க தரப்பே பொய் குற்றச்சாட்டுக்களையும் சேறு

பூசும் வகையிலான கருத்துகளை முன்வைப்பது பாதூரமான பிரச்சினை என்று அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன சற்றுமுன் நாடாளுமன்றில் தெரிவித்தாா்.


இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலந்துரையாடலின் பின்னரே, நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு தயாசிறி ஜயசேகர எம்.பி. கோரியிருந்தாா். சில தினங்களுக்கு முன்னா் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே சபையில் முன்வைத்த கேள்விக்கு நான் பதலளித்திருந்தேன். அதன் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி 200 வாகனங்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, ஜனாதிபதி செயலகத்தின் வருடாந்த செலவு 3.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


ஒரு நாளைக்கு ஒரு வாகனத்தை பயன்படுத்தினால் 200 நாட்கள் செல்லும்போது 200 வாகனங்களையும் பயன்படுத்தியிருக்க வேண்டும. இது முற்றிலும் பொய்யான கருத்தாகும். எனக்கு நான்கு வாகனங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தன. அரசாங்கத் தரப்பின் இதுபோன்ற கருத்துகள் தவறானதும் சேறுபூசும் வகையிலான செயற்பாடுகளாகும். முன்னர் நடந்த விடயங்களை என்னாலும் தகவல்களை வெளியிட முடியும்.


எனது ஆட்சிகாலத்தில் செலவு செய்யப்பட்டதாக தெரிவித்து 3.5 பில்லியன் ரூபாவையும், தற்போதைய ஜனாதிபதி 2020ஆம் ஆண்டில் செலவு செய்த 1.5 பில்லியன் ரூபாவை ஒப்பிட்டு நான் பெருந்தொகை பணத்தை செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனது காலத்தில் ஜனாதிபதி செயலகத்தினூடாக 7 பிரதான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வேலைத்திட்டங்கள் இன்று எந்தவொரு இடத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரியவில்லை. முன்னர் இருந்த அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்த வில்லை. ஆகவே, அரசாங்க தரப்பிலிருந்து இவ்வாறு தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தவறான கருத்தாகும்.


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆளும் தரப்பில் இருக்கும்போது ,ஆளும் தரப்பில் இருப்பவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது பாரதூரமான குற்றமாகும் . இநற்த பிரச்சினை தொடர்ந்து செல்வதற்கு இடமளிக்க கூடாது.


மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக நினைக்கும் அரசு அதில் சுதந்திரக்கட்சி எம் பிக்கள் 14 பேர் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.விவசாயத்துறையில் இந்தளவு பிரச்சினை ஏற்பட்டமைக்கு அமைச்சர் மஹிந்தானந்தவே காரணம் .கொடும்பாவிகள் எரிக்கப்பட்டமைக்கு இதுவே காரணம் .தகவல்கள் இருக்கிறது வெளியிடுவோம் என்று கூறுகிறீர்கள்.தகவல்கள் இருப்பதாயின் அதனை வெளியிடுங்கள்.தனது தலைவரை உசுப்பேற்ற மஹிந்தானந்த பொய்களை சொல்லக் கூடாது.எங்களாலும் அடிக்க முடியும்.ஆனால் நாங்கள் அப்படி அபத்தமாக நடக்கமாட்டோம்.- என்றார் மைத்ரி

siva ramasamy

அரசாங்கமே எமக்கு பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து சேறு பூசுகிறது.... சற்றுமுன் பாராளுமன்றில் அரசை போட்டுத்தாக்கி பேசிய மைத்திரி அரசாங்கமே எமக்கு பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து சேறு பூசுகிறது.... சற்றுமுன் பாராளுமன்றில் அரசை போட்டுத்தாக்கி பேசிய  மைத்திரி Reviewed by Madawala News on November 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.