செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஹலால்தீன் கிண்ணியாவில் தாக்கப்பட்ட சம்பவம்.


- கந்தளாய் யூசுப் / - Hasfar A Haleem 

 கிண்ணியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டச் செய்தியை சேகரிக்கசென்ற  டிவி ஊடகவியலாளர்

ஒருவர்  நேற்றைய முன் தினம் (2021.11.23) தாக்கப்பட்டுள்ளார்


அவரது கேமராவும் சேதமாக்கப்பட்டு, குடை உடைக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் பல இடங்களில் காலாலும், கைகளினாலும் தாக்கி உள்ளனர்.


பின்னர் அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவத்தினர் அவரை காப்பாற்றியுள்ளனர்.


கிண்ணியாவில் நேற்று முன்தினம் (23) கிண்ணியா தளவைத்தியசாலைக்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போதே  ஊடகவியலாளர் எச்.எம்.ஹலால்தீன் தாக்கப்பட்டுள்ளார்


அத்துடன் அவரின் கேமராவும் குடையும் இவ்வாறு கலகக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

 

இந்த இளைஞர் குழுவுக்கு அரசியல் பின்னணி கொண்ட குழு இருப்பதாகக் கூறப்படுகிறது


இவர்களினால் பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


அமைதி இன்மையைத் தோற்றுவித்த இவர்கள் தகாத வார்த்தைகளினாலும் ஏசியுள்ளார்கள் 


அண்மைக்காலமாக இவ்வாறு செய்தி சேகரிக்கச் செல்கின்ற  உடகவியலாளர்களைத் தாக்குவது.ஊடகக் கருத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.


எனினும் தாக்கியவர்களின் முகங்கள் கெமராவுக்குள் பதிவாகியுள்ளன


பல ஊடக சங்கங்கள் அவரை பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கேட்டும் அவர் அதனைச் செய்யவில்லை.

ஏன் எனக் கேட்டதற்கு 

"எனது ஊரான் தானே அடித்தார்கள் பின்னால் அவர்கள் உணர்வார்கள் என்றார்".

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஹலால்தீன் கிண்ணியாவில் தாக்கப்பட்ட சம்பவம். செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஹலால்தீன் கிண்ணியாவில் தாக்கப்பட்ட சம்பவம். Reviewed by Madawala News on November 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.