முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் சிலரின் இக்கட்டான நிலைமை.இரு தினங்களுக்கு முன்பு பட்ஜெட்   வாக்கெடுப்பு நடைபெற்றதனால்

முஸ்லிம்களின் அரசியலில் ஓர் அனர்த்தம் நிகழ்ந்தது.


சரியோ, பிழையோ பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது பிழை என்று தலைவர் சார்பானவர்களும், ஆதரவாக வாக்களித்தது சரி என்று எம்பிக்களின் ஆதரவாளர்களும் பதிவிட்டிருந்தார்கள்.


இதற்கு அப்பால் இன்னும் பல போராளிகளும், கட்சிக்காரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக கூற தயங்கவில்லை.  


ஆனால் தலைவர் விசுவாசி என்று நடிகர்களுக்கே நடிப்பு சொல்லிக்கொடுக்கின்ற போலி விசுவாசிகள் சிலரை முகநூல் பக்கம் காண முடியவில்லை.


எம்பிக்களுக்கு ஆதரவாக பதிவிட்டால் அது தலைவருக்கு எதிராக அமைந்துவிடும். அவ்வாறு தலைவருக்கு எதிராக கருத்து கூறினால் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவது, அரசியலில் வளர்வது, பணம், பதவிகள் போன்ற இதர சலுகைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் வீணாகிவிடும்.


அதேநேரம் இந்த சந்தர்ப்பத்தில் தலைவருக்கு ஆதரவாக பதிவிட்டால் அது எம்பிக்களுக்கு எதிராக அமைந்துவிடும். அவ்வாறு எம்பிக்களுக்கு எதிராக கருத்தினை பதிவிட்டால் “நாங்கள் தந்த பணத்தை திருப்பி தாருங்கள்” என்று ஹரீஸ் எம்பியும், பைசல் காசிம் எம்பியும் கேட்டுவிடுவார்கள் அல்லது யாரிடமாவது ரகசியத்தை வெளிப்படுத்திவிடுவர்கள் என்ற அச்சம் உள்ளது.


எனவே சத்தமில்லாமல் சும்மா இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. இதுதான் இன்றைய சில மு.கா போராளிகளின் நிலைமை.


இவர்கள் தங்களை கட்சிக்கரர்களாகவும், தலைவரின் விசுவாசிகளாகவும் காண்பிப்பதற்காக நடிக்கின்ற நடிப்புக்கள் ஏராளம். இறுதியில் இவ்வாறானவர்கள்தான் கட்சிக்கு மட்டுமல்ல, முழு சமூகத்துக்கும் ஆபத்தானவர்கள் என்பது இப்போது புரியாது. சில காலங்கள் சென்றபின்பு அனைவரும் புரிந்துகொள்வீர்கள்.  


முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் சிலரின் இக்கட்டான நிலைமை.  முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் சிலரின் இக்கட்டான நிலைமை. Reviewed by Madawala News on November 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.