ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவை நிராகரித்த சபாநாயகர். - Madawala News Number 1 Tamil website from Srilanka

ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவை நிராகரித்த சபாநாயகர்.அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத்
 தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் முழு அரசாங்கத்திற்கும் எதிராக இருக்க வேண்டும் என்ற ரணில் விக்ரமசிங்கவின் திருத்தங்களை ஏற்க முடியாது என்றும் சபாநாயகர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் இடம்பெறுவதற்கு முன்னர் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவை நிராகரித்த சபாநாயகர். ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவை நிராகரித்த சபாநாயகர். Reviewed by Madawala News on July 20, 2021 Rating: 5