சிறுமி மரணமடைந்த விவகாரம்... சஜித் பிரேமதாஸ ஏன் இதுவரையில் வாய்திறக்கவில்லை ? அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கேள்வி. - Madawala News Number 1 Tamil website from Srilanka

சிறுமி மரணமடைந்த விவகாரம்... சஜித் பிரேமதாஸ ஏன் இதுவரையில் வாய்திறக்கவில்லை ? அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கேள்வி.ரிஷாட்டின் வீட்டில் வைத்து மரணமடைந்த சிறுமி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ

ஏன் இதுவரையில் வாய்திறக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து முடிந்தால் ரிஷாட்டை விலக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ரிஷாட் பதியூதீன் அமைச்சராக இருந்தபோது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவந்தோம். அப்போது முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் ரிஷாட்டுக்காக தமது பதிவிகளை இராஜினாமா செய்திருந்தார்கள்.


தற்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” எனவும் அவர் இதன்போது

வினவினார். “ரிஷாட்டின் வீட்டில் பணிப்புரிந்த சிறுமி ஒருவர் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு,

தீக்காயங்களுடன் மரணமடைந்துள்ளார். இந்த விடயத்தை தெரிந்துகொண்ட

ரிஷாட் அச்சத்தில் வைத்தியசாலைக்குச் சென்று தங்கிவிட்டார்.


இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ எதையும் கூறவில்லை”

என்றார். “ரிஷாட்டுக்கு எதிராக இதுமட்டுமல்ல; சதொசவில் கோடிக்கணக்கான பண

ஊழல் தொடர்பிலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.


ரிஷாட்டை ஏன் தண்டிக்கவில்லை எனக் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வாறே அமைதியாக இருங்கள். நாங்கள் சரியான நேரத்தில், உரிய வகையில் ஆதாரங்களை திரட்டி, வழக்குத் தொடர்வோம்” எனவும் தெரிவித்தார்.


“முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ரிஷாட்டை விலக்க வேண்டும். ஆனால், சஜித், ரிஷாட்டை விலக்கப்போவதில்லை. ஐக்கிய மக்கள் சக்தி ரிஷாட்டின் பணத்திலேயே இயங்கி வருகிறது.


அக்கட்சிக்காக ரிஷாட்டே நிதி உதவி செய்கிறார். எனவே, ரிஷாட்டைப் பாதுகாப்பதைத் தவிர, சஜித்துக்கு வேறு வழியில்லை” எனவும் மேலும் தெரிவித்தார்.

சிறுமி மரணமடைந்த விவகாரம்... சஜித் பிரேமதாஸ ஏன் இதுவரையில் வாய்திறக்கவில்லை ? அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கேள்வி. சிறுமி மரணமடைந்த விவகாரம்...   சஜித் பிரேமதாஸ ஏன் இதுவரையில் வாய்திறக்கவில்லை ?  அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கேள்வி. Reviewed by Madawala News on July 20, 2021 Rating: 5