ஜி.எஸ்.பி வரிச்சலுகை கிடைக்காமற் போனால் அதனை எதிர்கொள்வதற்கு மாற்று வழி தொடர்பிலும் அரசாங்கம் கவனம்.



ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக நாட்டை கொள்கை ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.


இருப்பினும் ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை இராஜதந்திர ரீதியில் மேற்கொண்டு வருகிறது. சில வேளை இது கிடைக்காமற் போனால் அதனை எதிர்கொள்வதற்கு மாற்று வழி தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற விவாதத்தில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உரையாற்றினார்.

கொழும்பு பங்குச் சந்தையிலும் முறையான ஒழுங்குறுத்தல் வேலைத்திட்டம் அமுலில் இருக்க வேண்டுமென்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் முன்னின்று செயற்படுவதாகவும் கூறினார்.

சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குறுத்துவது சிரமமான காரியம் என்று கூறப்படும் கூற்று தவறானதாகும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை ஸ்தாபிக்குமாறு விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கோரிக்கை விடுத்தார்.

கிராமிய மட்டத்திலும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான குழுக்களை ஈடுபடுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் டெல்டா எனப்படும் திரிபடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே சுட்டிக்காட்டினார்.
ஜி.எஸ்.பி வரிச்சலுகை கிடைக்காமற் போனால் அதனை எதிர்கொள்வதற்கு மாற்று வழி தொடர்பிலும் அரசாங்கம் கவனம். ஜி.எஸ்.பி வரிச்சலுகை கிடைக்காமற் போனால் அதனை எதிர்கொள்வதற்கு மாற்று வழி தொடர்பிலும் அரசாங்கம் கவனம்.  Reviewed by Madawala News on June 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.