பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக சமூக ஊடகத்தில் பதிவிட்ட சப் இன்பெக்டர் உடனடியாக இடைநிறுத்தம்!



  (களுத்துறை என் ஜெயரட்னம்)  

அளுத்கமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக கருணாரட்னவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்

வகையில் காணொளி (வீடியோ) ஒன்றை சமூக வலைத் தளத்தில் பரப்பியமை உட்பட 11 குற்றச்சாட்டுகளின் கீழ் இடம்பெற்ற விசாரணையின் பெறுபேறுகளுக்கு அமைய அதே பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடியாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.


களுத்துறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த மற்றும் களுத்துறை வலய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கபில பிரேமதாச ஆகியோரின் பணிப்புரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து 11 குற்றச்சாட்டுகளுக்கான குற்றப்பத்திரிகை வழங்கி பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக களுத்துறை வலய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த த சில்வா தெரிவித்தார்.

பொலிஸ் கட்டளைகளுக்கு கீழ்படியாது பொலிஸ் மா அதிபரின் ஆணை மற்றும் சுற்றறிக்கையை கவனத்தில் கொள்ளாது தனது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் நடவடிக்கைகளை ஏளனம் செய்யும் வகையில் சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை வௌயிட்டமை தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.


மேற்படி உப பொலிஸ் பரிசோதகர் மொரட்டுவை மற்றும் அளுத்கமை பொலிஸ் நிலையங்களில் 9 வருடங்கள் சேவையாற்றி வந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

- metro 

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக சமூக ஊடகத்தில் பதிவிட்ட சப் இன்பெக்டர் உடனடியாக இடைநிறுத்தம்! பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக சமூக ஊடகத்தில் பதிவிட்ட சப் இன்பெக்டர்  உடனடியாக  இடைநிறுத்தம்! Reviewed by Madawala News on February 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.