PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறை



அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள்

 மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது. 


குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளுக்கு தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இவ்வாறு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 


பானந்துறை நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி குறித்த கொரோனா தொற்றாளரை அழைத்துவர சென்ற பொழுதே அவர் இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறை PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள் கடூழிய  சிறை Reviewed by Madawala News on January 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.