தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய குச்சவெளி கிராமத்தின் பகுதிகள். - Madawala News Number 1 Tamil website from Srilanka

தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய குச்சவெளி கிராமத்தின் பகுதிகள்.


 
ஏ.எல்.றபாய்தீன் பாபு                     

குச்சவெளியில் கண மழை  வயல் நிலங்கள் குளங்கள் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் , கடந்த இரண்டு

நாட்களாக கண மழை பெய்து வருகிறது இதனால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் 

மூழ்கியுள்ளன.  


வடலிக்குளம் , பெரிய வில்லுக்குளம் .மகாஆளம் குளம், இலுப்பைக்குளம் , சமளங்கு  ளம் ஆகிய குளங்கள் நிரம்பி வழி வதால் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. 


குசவனாற்றாறு மேல் போட்டு வெள்ளம் பாய்வதால் கள்ளம் பத்தை வீதி போ.வரத்து துண்டிக்கப்பட்டுள்ளது அறுவடைக்கு இன்னும் ஓரிரு கிழமை உள்ள நிலையில் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்முறை  விவசாயிகள் மூன்று கட்டங்களாக பாதிக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி வடக்கு விவசாய சம்மேளனத் தலைவர் எஸ்.யூசுப் தெரிவித்தார்.


 வறட்சி , பீடைத்தாக்கம் தற்போது வெள்ளப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது, சுமார் 1500 ஏக்கர் வயல் அறுவடை நேரத்தில் வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாய காப்புறுதி செய்தவர்கள்  பாதிக்கப்பட்டவர்கள் விவசாய சம்மேளனத்தினூடாக  பதிவுகளை மேற்கொள்ளுமாறு  கமநல உத்தியோகத்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய குச்சவெளி கிராமத்தின் பகுதிகள். தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய குச்சவெளி கிராமத்தின் பகுதிகள். Reviewed by Madawala News on January 13, 2021 Rating: 5