இங்கிலாந்தில் இருந்து சமீபத்தில் இலங்கைக்கு வந்தவர், உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுடன் இனங்காணப்பட்டார்.


பிரித்தானியாவில் உருமாறிய  புதிய கொரோனா வைரஸ் தொற்றுடன் நபர் ஒருவர்   இலங்கையில்

கண்டறியப்பட்டுள்ளார்.


சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர கூறுகையில், சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த நபர் இங்கு  தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார். அவரிடமே உருமாறிய  புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


 நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் நீலிகா மலாவிகே , ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் பீடம் மற்றும் கோவிட் -19 குறித்த பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு இந்த புதிய வைரஸ் தொற்றை  உறுதிப்படுத்தியுள்ளது.


டாக்டர் சுதத் சமரவீரா, புதிய வைரஸ்  மிகவும் வேகமாக  பரவக்கூடியது மற்றும் நாட்டில் தற்போதுள்ள வைரசுக்கு   வித்தியாசமாக இது  செயல்படுகிறது என்றார்.


வைரஸின் புதிய மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு இதுவரை புதிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை, ஆனால் சமூகத்தில் புதிய திரிபு ஏற்படுவதைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இங்கிலாந்தில் இருந்து சமீபத்தில் இலங்கைக்கு வந்தவர், உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுடன் இனங்காணப்பட்டார். இங்கிலாந்தில் இருந்து சமீபத்தில் இலங்கைக்கு வந்தவர்,  உருமாறிய புதிய கொரோனா வைரஸ்  தொற்றுடன் இனங்காணப்பட்டார். Reviewed by Madawala News on January 13, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.