மட்டக்களப்பு கறடியனாறு தனிமைப்படுத்தல் முகாமில் வழங்கப்படும் உணவு தரம் குறைந்தவை, சாப்பிட உகந்தவைகள் அல்ல எனவும் விசனம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

மட்டக்களப்பு கறடியனாறு தனிமைப்படுத்தல் முகாமில் வழங்கப்படும் உணவு தரம் குறைந்தவை, சாப்பிட உகந்தவைகள் அல்ல எனவும் விசனம்.- ஏ.பி.எம்.அஸ்ஹர்-

மட்டக்களப்பு கறடியனாறு தனிமைப்படுத்தல் முகாமில் வழங்கப்படும் உணவு தரம் குறைந்தவையாகவும்

சாப்பிட உகந்தவைகள் அல்ல எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரகாலமாக  கறடியனாறு தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கின்ற சில கொரோனா தொற்றாளர்கள் இதனை ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

இங்கு வழங்கப்படும் உணவின் தரம் தொடர்ச்சியாக மோசமாக காணப்படுவதாகவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் 


இதன் விளைவாக பலருக்கும் உணவு ஒவ்வாமை  மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன


அத்தோடு நேற்று  வழங்கப்பட்ட பகல் உணவில் புழுக்கள்  காணப்பட்டமையானது பாரிய சங்கடத்தை தோற்றுவித்துள்ளது. அத்தோடு எதிர்காலத்தில் இங்கு வழங்கப்படும் உணவின் தரம், நம்பகத்தன்மையை கேள்விக்குற்படுத்தியுள்ளதாகவும் இவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

 இங்கு வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பாக பரிசீலீத்து தீர்க்கமான முடிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசரமாக மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 

மட்டக்களப்பு கறடியனாறு தனிமைப்படுத்தல் முகாமில் வழங்கப்படும் உணவு தரம் குறைந்தவை, சாப்பிட உகந்தவைகள் அல்ல எனவும் விசனம். மட்டக்களப்பு கறடியனாறு தனிமைப்படுத்தல் முகாமில் வழங்கப்படும் உணவு தரம் குறைந்தவை,  சாப்பிட உகந்தவைகள் அல்ல எனவும் விசனம். Reviewed by Madawala News on January 13, 2021 Rating: 5