ஹரீனின் உடலில் ஒரு மயிருக்கேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும் - சஜித் பிரேமதாஸ



நாடாளுமன்ற உறுப்பின் ஹரீன் பெர்ணான்டோவின் உடலில், 
ஒரு மயிருக்கேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பொறுப்புக் கூறுவேண்டும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


இன்று தொடக்கம், எதிர்காலங்களில் ஹரீன் பெர்ணான்டோவுக்கு எந்தவொரு ஆபத்து ஏற்பட்டாலும் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், ஹரீன் பெர்ணான்டோவின் பாதுகாப்புக்காக, 365 நாள்களில் 24 மணிநேரமும் ஐக்கிய மக்கள் சக்தியும், எதிர்க்கட்சி என்ற வகையில் முன் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.


ஜனநாயக நாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருப்பதாகவும் எனினும் அந்தச் சுதந்திரத்தை குழிதோண்டி புதைக்க, அரசாங்கம் முயல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹரீனுக்கு, ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் முழு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் எதிர்க்கட்சித் தலைவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் கருதுவதாக அவர் கூறியுள்ளார். 
ஹரீனின் உடலில் ஒரு மயிருக்கேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும் - சஜித் பிரேமதாஸ ஹரீனின் உடலில் ஒரு மயிருக்கேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும் - சஜித் பிரேமதாஸ Reviewed by Madawala News on January 10, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.